Tuesday, November 25, 2008

டாக்டர் கலைஞர்

சோழநாட்டு சூரியன் வாழ்க! வாழ்கவே!
அது 60 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நீதிக்கட்சி திராவிட கழகமாய் பெயர் மாற்றம் பெற்று இன இழிவு ஒழிப்பு, சுயமரியாதை, சமூக சீர்த்திருத்தத்தை தன் களமாய் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருந்த காலம்.

திராவிடர் கழகத்துக்கென தனி கொடியில்லை. கழக முன்னணியினர் கழகத்துக்கு என ஒரு கொடி வேண்டும் என முடிவு செய்து கொடியினை வடிவமைக்க கூடியிருக்கிறார்கள். தேசத்தின் இழிவை குறிக்கும் வகையில் கருப்பு நிறமும், அந்த இழிவினை ஒழிக்கும் புரட்சி நிறமாக சிகப்பினையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒரு வெள்ளைத்தாளிலே கழகத்துக்கான கொடி வரையப்படுகிறது. கருப்பு நிற மையினால் தாள் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்படுகிறது. நடுவிலே சிகப்பு வட்டம் வரவேண்டும். யாரிடமாவது சிகப்பு நிற பேனா இருக்கிறதா என்று பெரியார் கேட்கிறார். யாரிடமும் இல்லை.

"சிகப்புநிற மை எதற்கு? என் குருதி இருக்கிறதே" என்று கூறியபடி வந்த இருபது வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தன் விரலை குண்டூசியால் துளைத்து வந்த குருதியை கொண்டு சிகப்பு வட்டத்தை பூர்த்தி செய்கிறார். கழகக் கொடி கம்பீரமாக தொண்டனின் குருதியால் உருவாகிறது. அந்த இளைஞர் 84 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ மண்ணில் அஞ்சுகத்தம்மாளின் திருவயிற்றிலே உதித்த உதயசூரியனாம் டாக்டர் கலைஞர்.

கல்லூரியையும், கல்யாண மண்டபத்தையும் காக்க தனி கட்சி தொடங்கிய குடிகாரனெல்லாம் இன்று கலைஞரை பார்த்து எப்போது குடிவந்தாய் கழகத்துக்கு? என்று கேட்கிறான். இந்த இனமான வரலாறு எல்லாம் அந்த குடிகாரனுக்கு தெரியுமா?

இன்று திராவிடக் கட்சிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் கட்சி கொடிகளில் எல்லாம் இருக்கும் சிகப்பு எங்கள் தலைவரின் ரத்தம்!

மானங்கெட்டவர்களே! மதியிழந்தவர்களே! உங்களுக்கெல்லாம் சூடு, சொரணை சிறிதேனும் இருந்தால் தலைவர் கலைஞரின் குருதியில் விளைந்த சிகப்பு நிறத்தை உங்கள் கட்சிக் கொடிகளில் இருந்து நீக்கிவிட்டு அரசியல் நடத்துங்கள். இல்லையேல் பார் போற்ற 84வது பிறந்தநாளை காணும் எங்கள் தங்கத் தலைவன், சோழ நாட்டு சூரியன் டாக்டர் கலைஞரின் பாதம் தொட்டு வணங்கி பிழைத்துப் போங்கள். அரசியல் தலைவர்களிலேயே அரசியல் வாழ்விலும் சரி, சொந்த வாழ்விலும் சரி முழுத்திருப்தியும், எவரெஸ்ட் உயரத்தையும் அடைந்த பரிபூரணத் தலைவர் ஒருவர் உண்டென்றால் உலக வரலாற்றிலேயே அது தலைவர் கலைஞர் மட்டும் தான்.

நடிகர் திலகம் ஒருமுறை சொன்னபடி நமது வாழ்நாளிலே சிலவற்றை யாருக்காவது தரமுடியுமேயானால் உடன்பிறப்புகள் அனைவரும் எங்கள் வாழ்நாளில் பாதியை தலைவர் கலைஞருக்கு தந்து... இன இழிவு நீங்க, தமிழனின் புகழ் தரணியெங்கும் பரவ அந்த தங்கத் தலைவனை பல நூற்றாண்டுகளுக்கு வாழவைப்போம்.

வாழும் தமிழே வாழி! நீ வாழ்ந்தால் தமிழ் வாழும், தமிழனின் புகழ் உயரும் என கூறி வாழும் வள்ளுவன் தலைவர் கலைஞரை வாழ்த்த வயதில்லாமல் உடன்பிறப்புகள் வணங்குகின்றோம்.

வாழ்க தமிழ்!!! வெல்க தமிழர் தலைவனின் நெஞ்சுரம்!!! தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதிய மாபெரும் தலைவர்..... தமிழனுக்கு தன்மான உணர்வை உணரவைத்த நம் தலைவர்...

அண்ணாவின் தாராக மந்திரம்.....
கடமை... கண்ணியம்.... கட்டுப்பாடு..

"கடமையை மட்டுமே கண்ணாகக் கொண்டு வாழ்ந்து, தமிழகத்து இருளை அகற்றிய உதயச்சூரியன்..."

"தனக்கென்று எதையும் தேடிக்கொள்ளா தன்னலம் மற்றத் தலைவர்...."
"அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது வாழ் நாள் முழுவதும் தியாகம் செய்த தாணைத்தலைவர்.."

நன்றி - திராவிடன் "நவீன்"

Read more...

திராவிட முன்னேற்றக் கழகம்

இது அதிகாரப்பூர்வ இணையமல்ல…ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியும் , திமுகவின் அடிப்படைப் பண்புகளான கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு இவைகளை உயிர் மூச்செனப் பின் தொடரும் உடன் பிறப்புகளின் தளம்..!

திராவிட முன்னேற்றக் கழகம் ( தி. மு. க., Dravida Munnetra Kazhagam ) தமிழ்நாட்டின் ஒப்பில்லா அரசியல் கட்சியாகும்.தந்தை பெரியார் என தனது தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடக்கழகத்திலிருந்து சி. என். அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1949 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார்கள்.

அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அறிஞர் அண்ணா (சி.என். அண்ணாதுரை) தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி.மு.க.வின் கொடியாக தேர்வு செய்யப்பட்டது.

1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியாரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது.

1953 ஜூலை 14, 15-ல் அந்நாளைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. 1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2-வது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது.

1958 மார்ச் 2-ல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு “உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. 1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது. 19.4.1961-ல் அக்ககட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி ‘தமிழ்த் தேசியக் கட்சி’-யை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961-ல் திமுக பேரணி நடத்தியது.

1962-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திரா கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச் செயலர் அண்ணா, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார். 1963-ல் “பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 1963 ஜூன் 8, 9, 10 தேதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது.

“தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் 17-ல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க. 1967-ல் நடைபெற்ற 3-வது பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது 1967 பிப்ரவரி 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார்.

அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 ஜூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது.

1969-ல் கலைஞர் (மு. கருணாநிதி) தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பின் கலைஞர், தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1971-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. கலைஞர், 2-வது முறையாக முதல்வர் பொறுப்போற்றார்.

1972 அக்டோ¡ர் 14-ல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது. 1974 ஏப்ரல் 20-ல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.

1975 ஜுன் 25-ல் இந்திய அரசு அவசரநிலை அறிவிக்கப்பட்டதை யடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 முதல் 1976 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வின் செயல்பாடுகளில் அனைத்து சாதியினர் அர்ச்சகராதல் சட்டம் (1971 சனவரி 12), அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் (1970) ஆகியவற்றை முக்கியமானவையாக குறிப்பிடலாம். 1977 ஜூலை 4-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது. 1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது தி.மு.க. இருப்பினும் 1980-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது. 1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. அளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது.

1983 ஆகஸ்ட் 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர், பொதுச் செயலர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். 1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9-ல் தி.மு.க. தலைவர் கலைஞர் உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 1987 டிசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 சனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

1989 டிசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டது. 1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 1991 முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் (அக்கட்சியின்) ‘முரசொலி’ ஏடு ஒடுக்குமுறைக்குள்ளானது.

1993 அக்.11-ல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ (வை. கோபால்சாமி) நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் 2-வது பெரிய பிளவு உருவானது. 1995-ல் தமிழீழத் தமிழர்களுக்கான ஆதரவுப் பேரணியை திமுக நடத்தியது. 1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1967-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது.

புதுவை, காரைக்கால், கர்நாடகம், ஆந்திரம், மும்பை, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இக்கட்சிக்கு கிளைகள் உண்டு. திமுக.வின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘முரசொலி’ வெளிவந்து கொண்டிருக்கிறது.

இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான பாரதீய ஜனதாவுடனும் தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய மதிமுகவுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது.

2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, பாரதீய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது.

அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று கழகத் தலைவர் , முத்தமிழ் அறிஞ்ர் மு.கருணாநிதி அவர்கள் ஐந்தாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்று நல்லாட்சி நடத்தி வருகிறார்…..

Read more...

மாறன் சகோதரர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும்

கலைஞர் தன்னுடைய மனசாட்சியாகக் கருதிய முரசொலி மாறனின் பிள்ளைகள் என்ற ஒரே காரணத்திற்காக மாறன் சகோதரர்களுக்கு செய்தஉதவிகள் ஏராளம்.

கலைஞர் மாறன் சகோதரர்களின் அளவில்லாத நம்பிக்கை துரோகங்களையும், திமுகவுக்கும், தனக்கும், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எதிராக அவர்கள் திட்டமிட்டு செய்து வந்த சதிச் செயல்களையும் பெருந்தன்மையோடும் சில சமயம் வேதனையோடும் சகித்து வந்தார்.

1993 இல் முரசொலியின் பழைய கட்டிடத்தை வங்கி அடமானம் வைத்து சுமார் மூன்று கோடி கொடுத்து சன் குழுமத்திற்கு வித்திட்டவர் கலைஞர்.

திமுகவில் கலைஞரின் மகனான மு.க.ஸ்டாலினுக்கே தரப்படாத மரியாதையாக அரசியலில் அடி எடுத்து வைத்தவுடனேயே தயாநிதிமாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

முப்பது வருடங்களாக அரசியலில் மும்முரமாக பணியாற்றி, பட்டிதொட்டி எங்கும் பம்பரமாகப் பயணப்பட்டு கட்சிப் பணியாற்றி,
இந்திராகாந்தி அம்மையாரின் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்று `மிசா' கொடுமைகளையெல்லாம் அனுபவித்து மீண்ட தனது மகன் மு.க.ஸ்டாலினுக்கு முன்னரே தயாநிதியை அமைச்சராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.

முதன்முதலாக பாராளுமன்றத்தில் கால் பதிக்கும்போதே மத்திய அமைச்சர் என்ற பெரும் பதவி தயாநிதி மாறனுக்கு வழங்கி மகிழ்ந்தார் கலைஞர்.

தயாநிதி இவ்வாறாக கலைஞரின் பெருந்தன்மையை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி அரசியலில் வெகு திறமையாக காய் நகர்த்தி முன்னேறி வந்தது போலவே கலாநிதி தனது தொழிலில் வெற்றிக் கொடி நாட்டினார்.

திமுகவின் நிழலில் கலைஞரின் அரவணைப்பில் சன் குழுமம் மிகப் பலமாக வேரூன்றி வளந்தது, கலாநிதியின் தந்திரங்கள் மறைமுக திட்டங்கள் பலவற்றில் சில கலைஞரின் பார்வைக்கு வந்த போதும் முரசொலி மாறனை எண்ணி அவர் பொறுமை காத்தார்.

இந்தக் காலகட்டத்த்தில் சன் குழுமம் 14 தொலைக்காட்சி அலைவரிசைகள் , 2 பிரபல நாளிதழ்கள், 3 பருவ இதழ்கள், 4 பண்பலை வானொலி நிலையங்கள் என தான் கால் பதித்த எல்லாத் துறைகளிலும் அசுரத் தனமாக வளர்ந்தது.

சன் தொலைக்காட்சி பப்ளிக் லிமிட்டெட் கம்பனியாக 2005 முதல் அறிவித்துக் கொண்டு களத்திற்கு வந்து விட்டதால் இன்று அதன் மொத்த பங்குகள், அவற்றின் மதிப்பு போன்ற வற்றை கணக்கிட்டு இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக கலாநிதிமாறன் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

அதன்படி சன் தொலைக் காட்சியில் கலாநிதிமாறனின் 90 சதவீத பங்குகளின் மதிப்பு அப்போதைய பங்குச் சந்தை நிலைவரப்படி, கலாநிதியின் சொத்து மதிப்பு சுமார் 9,765 கோடி...!

அதாவது இது அதிகாரபூர்வமான சட்டப்படியான சன் தொலைக்காட்சியில் உள்ள கலாநிதி மாறனின் பங்கு மூலமான சொத்து மதிப்பு மட்டும் தான்.

இதை கணக்கிட்டுத்தான் இந்தியாவில் இருபதாவது பணக்காரராக கலாநிதி மாறன் அறிவிக் கப்பட்டார். ஆனால், சன் குழுமம் தவிர்ந்த 25 நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார்.

தினகரன் குழுமம், குங்குமம் உள்ளிட்ட பருவ இதழ்கள், எஸ்.சி.வி, 45 பண்பலை வானொலி நிலையங்கள், கோல் கேபிள்ஸ், கோல் கம்யுனிகேஸன்ஸ், டி.எம்.எஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட், டி.கே. எண்டர்பிரைசஸ் போன்ற 25 நிறுவனங்களிலும் அவர் தான் மிகப் பிரதான பங்குதாரர்களாகவும் மனைவி, அம்மா மல்லிகா, தம்பி தயாநிதி... உள்ளிட்ட குடும்ப உறவுகளை சிறிய பங்குதாரர்களாகவும் கொண்டு நடத்தி வருகிறார்.

இவை அனைத்தையும் கணக்கிலெடுத்தால் கலாநிதிமாறன் குறைந்த பட்சம் 40,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகிறார்.

மாறன் சகோதரர்களின் இக்தகைய எந்த ஒரு நிறுவனத்திலும் கலைஞரின் இரத்த உறவுகள் யாரையும் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ளவில்லை இந்த சதிகார மாறன் சகோதரர்கள்.

மாறன் சகோதரர்கள் தங்கள் சித்தப்பா முரசொலி செல்வத்திற்கும் அவருடைய மனைவியாக வுள்ளதால் கலைஞரின் மகள் செல்விக்கும் ஓரிரு நிறுவனங்களில் மிகச்சில பங்குகளை அனுமதித்துள்ளனர்.

முரசொலி மாறனின் சொந்தத் தம்பியான இந்த முரசொலி செல்வம் தான் தற்போது மாறன் சகோதரர்களைத் தீவிரமாக ஆதரிக்கிறார்.

ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் பிரதான பங்குதாரராக இருந்தார். மற்ற சிலரும் இருந்தனர்.

ஆனால், காலப்போக்கில் இவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக எப்படி கழற்றி விடப்பட்டனர் என்ற சூட்சுமம் தெரியவில்லை.

நவம்பர் 2005 இல் அதிகாரபூர்வமாக தயாளு அம்மாள் தனது 20 சதவீத பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டு விலகினார் என செய்தி வெளியானது.

வேகமாக வெற்றிகரமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்திலிருந்த தனது பங்குகள் முழுவதையும் தயாளு அம்மாள் விருப்பப்பட்டு விலக்கிக் கொண்டாரா? அல்லது வெறுப்புற்று வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டாரா? என்ற தகவல் இதுவரை தெரியவரவில்லை.

ஆனால், சன் குழுமம் ஆலமரமாய் வளர்ந்து கிளை பரப்பிக் கொண்டு போகும் நிலையில் ஆணிவேராய் தங்களுக்கு ஆரம்பத்தில் உதவிய கலைஞரின் குடும்ப உறவுகளுக்கு எந்தப் பலனுமில்லாமல் பார்த்துக் கொண்டனர் மாறன் சகோதரர்கள்.

முரசொலி மாறனை எண்ணி, மாறன் சகோதரர்களால் தனக்கும், திமுகவினருக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகளை எந்த நிலையிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் விவேகமாகவும் பல நேரங்களில் பெருந்தன்மை யாகவுமிருந்தார் கலைஞர்.

தனது கலையுலக அனுபவங்களை தொடராக எழுத விரும்பினார் கலைஞர். அதை கலாநிதி மாறனின் குங்குமம் இதழுக்கு சில ஆரம்ப அத்தியாயங்களை எழுதிக் கொடுத்தார். ஆனால், அதை பல மாதங்களாக பிரசுரிக்காமல் அலட்சியப்படுத்தினார் கலாநிதிமாறன்.

கலாநிதியின் கட்டளையால் தான் தனது கட்டுரைகள் பிரசுரமாகவில்லை என்பதை அறிந்த கருணாநிதி அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க, அது விகடனில் வாராவாரம் வெளியாகி பல்வேறு வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டது.

மாறன் சகோதரர்கள் தன்னையே உதாசினப் படுத்திய போதும் கலைஞர், மாறன் சகோதரர்கள் விசயத்தில் பொறுமை காத்தே வந்தார்.

இவை மட்டும் அல்லாது,

சன் செய்திகளில் பல நேரங்களில் கலைஞரின் முக்கிய அறிக்கைகள் போதுமான முக்கியத் துவமின்றி சுருக்கி சொல்லப்படுவது,

கலைஞர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஒரு சிலவற்றை ஒளிபரப்பாதது,

பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின் போன்றவர்களின் நிகழ்ச்சிகளையும், அறிக்கைகளையும் கூடுமானவரை ஒளிபரப்பாமல் தவிர்த்தது,

கனிமொழி `கருத்து' என்ற அமைப்பை தோற்றுவித்த போதும், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தியபோதும் இருட்டடிப்பு செய்தது,

கலைஞருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டதால் மாலன் அவமானப் படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது,

கலைஞர் சிபாரிசு செய்யும் யாரையும் சன் செய்திப் பிரிவிலோ அல்லது வேறு பிரிவிலோ சேர்ப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே கலாநிதி மாறன் கடைப்பிடித்து வந்தது,

இப்படி எல்லாம் செய்து மாறன் சகோதர்கள் திமுகவினரையும், கலைஞரின் குடும்பத்தினரையும், கடைசியில் கலைஞரையுமே மதிக்காமல் நடக்க ஆரம்பித்தது எதனால் என்று பார்த்தால் சன்டிவி தொடங்கிய பிறகு திமுகவிற்கு கிடைத்த வெற்றிகள் அனைத்தும் தங்களாலேயே கிடைத்தது என்று அவர்கள் தப்புக் கணக்குப் போட்டதுதான்.

1996 தொடங்கி ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் தி.மு.க. வின் வெற்றிக்கு சன் தொலைக் காட்சியின் பலம் தான் காரணம் என்று கருதினர் மாறன் சகோதரர்கள்.

பெருவாரியான பார்வையாளர்களை தன்வசம் வென்றெடுத்திருந்த சன் குழுமத்தின் செய்திகள், கருத்துக் கணிப்புகள், விவாதங்கள் போன்றவை தி.மு.க. வின் வெற்றிக்கு கணிசமான பங்காற்றியது உண்மையே, ஆனால் அந்த வெற்றிக்கு முழுக் காரணமும் தாங்கள்தான் என்று கருதினர் மாறன் சகோதரர்கள். .

கலைஞர் 100 கூட்டங்களில் பேசினாலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை சன் தொலைக்காட்சியின் பத்து நிமிட ஒளிபரப்பு ஏற்படுத்துகிறது என்றும் கருதினர் மாறன் சகோதரர்கள்.

கலைஞரின் காலடி தடம் பட முடியாத குக்கிராமங்களுக்கெல்லாம் தங்கள் சன் டிவி தான் அவரது கருத்துகளை கொண்டு சேர்க்கிறது என்றும்,

சன் குழுமத்தின் பிரசார பலமில்லாமல் தி.மு.க.வால் தேர்தலை எதிர்கொள்வது இயலாதென்றும்

மாறன் சகோதரர்கள் மனக்கணக்குப் போட்டனர். ஆக, எப்படியாயினும் தங்களை அனுசரித்துப் போவதைத் தவிர கலைஞருக்கு வேறுவழியில்லை என்ற முடிவுக்கு வந்தனர். அதனாலேயே அவர்கள் தலை கால் புரியாமல் ஆட ஆரம்பித்தனர்.

சன் குழுமத்தின் ஆரம்பம் தொடங்கி அதன் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் கலைஞரின் பங்கிருந்தது.

கலைஞரின் அரவணைப்பு, பண உதவி, அரசியல் பலம் போன்றவை மாறன் சகோதரர்களின் விஸ்வரூப வளர்ச்சிக்கு விதையாய், நீராய் உதவியது என்பதை அவர்கள் பெற்ற அளப்பரிய செல்வாதாரமும், சிரமமில்லாமல் கிடைத்த அதிகார பலத்தால் பெற்ற ஆணவமும் சேர்ந்து மாறன் சகோதரர்களை மறந்துவிடச் செய்து விட்டன.

இந்தியப் பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் மாநில முதல்வர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், உலகப் பெரும் பணக்காரர்கள் இவர்களோடு தயாநிதிமாறனுக்கு பழகக் கிடைத்த வாய்ப்புகள் அவரை தலை, கால் தெரியாமல் புரட்டிப்போட்டது.

மாறன் சகோதரர்களின் கால்கள் யதார்த்தம் என்ற தரையைத் தொட மறுத்தது.
மரம் வேரை மறந்தது.

அளப்பரிய செல்வமும் அதிர்ஷ்டமுமாய் வந்த அதிகார பலமும் மாறன் சகோதரர்களுக்கு மனநிறைவைத் தரவில்லை,

கலைஞரின் அடுத்த தகுதியான வாரிசாக தயாநிதி மாறன் இருக்க, அதற்குத் தடைக்கற்களாக மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும், கனிமொழியும் இருப்பது தங்கள் இலட்சியத்திற்கு இடையூறாக கருதினார்கள்.

ஓரணியில் ஒன்றாக இருக்கும் மு.க.ஸ்டாலினையும், மு.க.அழகிரியையும் பிரிப்பது,

இருவரையும் ஒருவருக்கொருவர் எதிராய் மாற்றுவது,

தினகரனில் கலைஞரின் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பை கலைஞரின் எச்சரிக்கையையும் மீறி வெளியிடுவது,

அந்தக் கருத்துக் கணிப்பின் விளைவாய் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்த்து, அப்படி அவர்கள் செய்யும் வன்முறைகளை அடிப் படையாக வைத்து அவரது அரசியல் செல்வாக்கை அழிப்பது,
போன்றவையே மாறன் சகோதரர்களின் திட்டம்.

மதுரை மாவட்டத்தில் எஸ்.சி.வி. யின் ஏகபோகத்தை தடுத்து சிறு கேபிள் ஆப்பரேட்டர்களின் தொழிலுக்கு அரணாக மு.க.அழகிரி செயற்படுவதும் மாறன் சகோதரர்களின் கட்டற்ற கோபத்திற்கு மற்றொரு காரணமாயிருந்தது.

மதுரை தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் உயிர் பலியான பிறகு மு.க.அழகிரியை சட்டத்திற்கு மீறிய அதிகாரமையமாய் செயற்படுகிறார் என்று மீண்டும் மீண்டும் ஓலமிட்டன சன் தொலைக்காட்சியும், தினகரனும்.

அரசியலில் இலாபமும், நஷ்டமும் சகஜமே. ஆனால், கலைஞரின் தயவால் இலாபத்தை மட்டுமே அனுபவித்து வந்த மாறன் சகோதரர்கள், முதன்முறையாக நஷ்டத்தை கண்டு கதி கலங்கி குமுறி தீர்த்தனர்.

அழகிரியை சிறைக்குள் தள்ளாமல் நாங்கள் ஓயப்போவதில்லை....' என மார்தட்டினார்கள்.

அழகிரி ஆதரவாளர்கள் செய்தது அக்கிரமமாக இருக்கலாம். ஆனால் அதை தூண்டி விட்டது யார்?

தனது தலைவன் அவமானப் படுத்தப் படுவதை எதிர்த்து அமைதியாக அறவழியில் மட்டுமே போராட வேண்டும் என்பதை எல்லாத் தொண்டர்களிடமும் எதிர்பார்க்க முடியாது அல்லவா?

தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டால் பிரச்சினை வெடிக்கும் எப்று கலைஞர் எச்சரித்த பின்னும் அந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்ட மாறன் சகோதரர்களின் நோக்கம் என்ன?

மு.க.அழகிரியை எதிர்த்து நல்லவர்கள் என்று வேடம் போட்டுக் கொள்வதற்கு மாறன் சகோதரர்களுக்கு தார்மீக தகுதி என்ன இருக்கிறது.

கலைஞர் தன்னால் உருவாக்கப்பட்டவர்கள் தன்னைக் கடந்து சென்று தன் மகன் மு.க.அழகிரியை அழித்தொழிக்க நினைப்பதை தனது அறிவுக்கும் அனுபத்திற்கும் விடப்பட்ட அறைகூவலாகத் தான் எதிர்கொண்டார்.

தன்னைத் தவிர தாங்கிப் பிடிக்க ஆளில்லாத தயாநிதிமாறனை அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற அவருக்கு சிறிதளவும் சிரமம் ஏற்படவில்லை.

கட்சியின் அனைத்து மட்டத்தினரிடையேயும் மாறன் சகோதரர்கள் குறித்த மனக்கசப்பு மண்டிக் கிடந்தது. அது அவர்களை கலைஞர் கைவிட்ட பின்பு நிர்வாகக் குழுவில் பொங்கி பிரவகித்தது.

மாறன் சகோதரர்களின் வளர்ச்சி கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என தி.மு.க. திட்டவட்டமாக தீர்மானித்தது. மாறன் சகோதரர்களின் பேராசை பெரு நஷ்டத்தில் முடிந்தது.

நன்றி - அற்விழி வலைப்பூ

Read more...

மாசறு பொன்னே; முரசொலி மாறா! - கலைஞர்

மாசறு பொன்னே; முரசொலி மாறா! - கருணாநிதி

Murasoli Maran
சென்னை: மறைந்த, முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனின் 5-வது நினைவு நாளையொட்டி, அவருக்கு முதல்வர் கருணாநிதி கவிதை மூலம் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க.வின் முன்னணித் தலைவருமான முரசொலி மாறனின் 5-வது நினைவு தினம் இன்று. இதையொட்டி முதல்வர் கருணாநிதி, அவருக்கு கவிதை மூலம் நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் எழுதியிருப்பதாவது:

அண்ணா கண்ணுக்கு ஆச்சரிய குறியாக
மாசறு பொன்னே; வலம்புரி முத்தே!
அருமைக் கண்மணியே, அன்பு மாறனே!
ஓடி விட்டன ஐந்து ஆண்டுகள் உன்னைப் பிரிந்து!
உன்னை நினைவூட்டி என் நெஞ்சில் அலைபாயும் நிகழ்வுகளை
முரசொலி அலுவலக முகப்பில் நாங்கள் வைத்துள்ள சிலை;
அடுக்கடுக்காகக் காட்சியாக்கும்போது;
நீ தத்தித் தவழ்ந்த பருவம் தாளமிடுவது போல் தளிர் நடை போட்ட பருவம்;
என் தோளில் அமர்ந்து கோளிலி கோயிலுக்குப் போன பருவம்;
குவளைப் பள்ளியில் உன்னைக் குந்த வைத்தது முதல்
குடந்தைக் கல்லூரியில் சேர்த்து அக்காள் பெரியநாயகம் அரவணைப்பில் வளர்ந்து;
சேலம் கல்லூரியில் சிறப்புறு மாணவன் எனும் செவியினிக்கும் சேதியாலே சிந்தை குளிர்ந்து;
அண்ணா கண்களுக்கு ஆச்சரியக் குறியாகவும்
உன் அன்பு மாமனாம் என் கண்களுக்கு அழகும் அறிவும் கலந்த
மறக்க முடியாத மா மருந்தாகவும் விளங்கி;
எந்த மருந்துக்கும் இரக்கம் காட்டி இறங்கித் தொலையாத
இறுதி முடிவுக்கு இயற்கை ஆளாக்கிவிட்டது உன்னை!
எதை நினைத்து என்னைத் தேற்றிக் கொள்வது?
யாரை நினைத்து என் மனத்தை மாற்றிக் கொள்வது?
நீயும் சேர்ந்து வளர்த்த உயிர் போன்ற கழகம் இருக்கிறது!
அந்தக் கழகத்திற்கென ஒலித்து என்றைக்கும் கம்பீரம் குலையாத;
கையெழுத்து ஏடாகத் தொடங்கி;
திராவிடரின் தலையெழுத்தை உயர்த்திப் பிடிக்க
ஒலித்திடும் முரசொலி இருக்கிறது;
ஆனால் நீயில்லையே என் கண்ணே!
மாறன் என் தம்பியல்லவோ!
என்று மார்தட்டிச் சொன்ன மாமேதை
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு உன் மறைவு;
என் போன்றார்க்கு எரிமலையின் நெருப்பலை போல் அல்லவோ;
வாய்த்து வாட்டி வதைத்து விட்டது!
அகரம் கற்று கொடுத்த கலைஞரென
ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?
நீ எழுதிய புத்தகமா அது?
தமிழனுக்குச் சோகம் வரும்போதெல்லாம்
வேகமாக எழுகின்ற வினாவல்லவோ அது!
மாநில சுயாட்சியென்று மாமேதையாம் நீ எழுதிய
இந்த இயக்கத்தின் லட்சியப் புதையலாம் பெரும் நூலில்;
அறியாமை இருளில் மூடிக் கிடந்த
தமிழர்களின் விழி திறந்த பெரியார்
அரசியல் எழுச்சி எனும்
விளக்கேற்றி வைத்த அண்ணா
அன்பின் உருவங்களாம் எங்கள்
குடும்பச் சுடர்கள் முத்துவேலர், அஞ்சுகத்தாய்
ஆகியோரின் நீங்காத நினைவுக்கு!
என்று எழுதிவிட்டு;
எனக்கு அகரம் கற்றுக் கொடுத்து ஆளாக்கியவரும்
என் ஆசானுமாகிய கலைஞர் என்றும் கூறி,
நன்றி தெரிவித்திருக்கிறாயே; மாசற்ற உன்மனத்தில்
எழுந்த நன்றியுணர்வு அல்லவா அது?
அதனால்தான் என்றைக்கும்
உன் நிழற் படத்தையோ,
உருவச் சிலையையோ,
பார்க்கும் போதெல்லாம்
எனக்கு;
மாசறு பொன்னே
வலம்புரி முத்தே
காசறு விரையே
கரும்பே தேனே...
எனும் சிலப்பதிகார வரிகள்தான் என்
சிந்தையைச் சிலிர்க்க வைக்கின்றன
வாழ்க நீ இந்த
வையம் உள்ளவரை!

Read more...

இலங்கை: கருணாநிதி தலைமையில் 4ம் தேதி பிரதமரை சந்திக்க முடிவு

Sri Lankan Tamil refugees
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரக் கோரி வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சியினரும் பிரதமர் மன்மோகன் சிங்கை டிசம்பர் 4ம் தேதியன்று சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சட்டசபை கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் ஆகியோரின் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று கூட்டினார்.

ஆனால், இது இன்னொரு டிராமா தான் என்று கூறி அதிமுக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய முக்கிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டன. அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக ஆகியவையும் கூட்டத்தை புறக்கணித்துவிட்டன.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் சட்டசபைக் கட்சித் தலைவர் சுதர்சனம், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன், புரட்சி பாரதம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீ்ர்மானங்கள்:

இலங்கையில் இருந்து ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் பொறுமையாக இருக்கவிடாத நிலையில், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என மேலும், மேலும் வேண்டுகோள் என்ற அளவில் நில்லாது கடுமையாக குரல் கொடுத்து மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

மத்திய அரசு தன்னால் இயன்ற அளவுக்கு குரல் கொடுத்து வருவதை தமிழகம் உணர்ந்தபோதிலும், இலங்கை அரசு அதனை மதிக்காத நிலையில் இந்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சனையில் மேலும் வேகத்தை காட்ட வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் முதலமைச்சர் தலைமையில் டிசம்பர் 4ம் தேதியன்று டெல்லியில் பிரதமரை சந்திப்பது என்றும்,

அதற்கிடையே நவம்பர் 28ந் தேதியன்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இன்னொரு நாடகம்-ஜெ.:

முன்னதாக இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களைக் காப்பதில் முதல்வர் கருணாநிதி தோல்வி அடைந்து விட்டார். இந்த நிலையில் கூட்டப்பட்டுள்ள சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்னும் ஒரு கண் துடைப்பு நடவடிக்கையே. தமிழர்களை ஏமாற்ற முதல்வர் அரங்கேற்றும் இன்னொரு நாடகம் இது.

அக்டோபர் 14ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இலங்கையில் போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவதை மத்திய அரசு 2 வாரத்திற்குள் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என கெடு விதித்தார்.

ஆனால் பின்னர் அந்தக் கோரிக்கையை கைவிட்ட அவர், மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக அறிவித்தார். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது கருணாநிதிக்கே வெளிச்சம்.

அதேபோல இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின்னர் போர் நிறுத்தம் கிடையவே கிடையாது என அறிவித்தார். இதையடுத்து நவம்பர் 12ம் தேதி போர் நிறுத்தம் அமல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இதேபோல முதல்வரின் நடவடிக்கை கண் துடைப்பு என வைகோவும் விமர்சித்துள்ளார்.

பயனில்லா கூட்டம்-விஜய்காந்த்:

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேமுதிகவை பொறுத்த வரை இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு வழிவகை காண வேண்டும், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி மற்றும் இதர உதவிகள் செய்யுமானால், அதை உடனே நிறுத்த வேண்டும், இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்த வரை ராணுவத் தீர்வு சாத்தியம் இல்லை, அரசியல் தீர்வு மட்டுமே காணப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலை.

எவ்வளவு விரைவாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனித உயிர்கள் காப்பாற்றப்படும். அவசர கோலத்தில் செயல்பட வேண்டிய மத்திய, மாநில அரசுகள் இதுவரை தங்கள் பொறுப்புகளை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களை டெல்லிக்கு தந்தி கொடுக்க சொல்வதும், மனித சங்கிலி நடத்துவதும், அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டுவதும் இங்குள்ள தமிழ் மக்களை, திசை திருப்ப பயன்படுமே தவிர, இலங்கையில் பற்றி எரியும் தீயை அணைக்கப் பயன்படாது.

அதற்காக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதும், டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதும் தேவையற்றது என்றே கருதுகிறேன். எனவே தேமுதிக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது என்று கூறியிருந்தார்.

Read more...

ஓ , படப்பிடிப்பு முடிந்துவிட்டதா? கலைஞர்

சென்னை: ரயிலில் இடம் பிடிக்க ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு செல்வது மாதிரி, ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சி ரொம்பவும் அவசரப்படுகிறது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு பிரச்சனை நீண்ட பல ஆண்டுகளாக இருந்து வருகின்ற பிரச்சினை. அது பற்றி திமுக ஆட்சியிலே தற்போது தான் நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலே ஒரு குழு அமைக்கப்பட்டு, அவரிடம் இருந்து அறிக்கையினை விரைந்து பெற்று, அறிக்கை பெற்ற மறுநாளே அதுபற்றி ஓர் அறிக்கையும் அரசின் சார்பில் விரைவில் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் சார்பில் அறிக்கையே வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு நாங்கள் தான் காரணம் என்பதை போல வேறு சில கட்சிகளும் கூறிக் கொள்ள பார்க்கிறார்களே?

பதில்: இந்த அறிவிப்பை வரவேற்கும் கட்சிகளையும், தலைவர்களையும் வாழ்த்துகிறேன். குறிப்பாக இந்த கோரிக்கையில் முனைப்புடன் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்பதை நான் மறக்க மாட்டேன். ஏற்கனவே என் வீட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்து மருமகள்களும், மருமகன்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே சம்பந்தி உறவினர்களாகி விட்டார்கள் என்பதையும் பெருமிதத்துடன் எண்ணிப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் கூட என்னிடம் 24 மணி நேரமும் அணுக்கத் தொண்டனாக இருந்து என்னை கவனித்துக் கொள்வதே நித்யா என்ற ஒரு அருந்ததிய இளைஞன் தான்.

கேள்வி: தமிழகத்திலே உள்ள இலங்கை அகதிகளை திரும்பி அனுப்ப மத்திய அரசு அறிவித்திருப்பதைப் போல தா.பாண்டியன், நெடுமாறன் போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்களே?.

பதில்: அந்த செய்தியில் உண்மை இல்லை என்று உடனடியாக அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது. யுத்த நேரத்தில், உணர்ச்சிக்கு எளிதில் ஆளாகக் கூடிய இதுபோன்ற பிரச்சினைகளில் உண்மை எதுவென்று தெரியாமல் அவசரப்பட்டு அறிக்கை விட்டு, மக்களை குழப்பிவிடக் கூடாது.

இலங்கை பிரச்சினை குறித்து பலரும் பல கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எனக்கு கடிதம் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் தொடர்ந்து பல்வேறு யோசனைகளை எல்லாம், என்ன செய்யலாம் என்பது குறித்து தெரிவித்து வருகிறார். அதற்கு நான் பதிலும் எழுதியுள்ளேன். அவர் கூறிய யோசனைகளை பற்றி தொடர்புடையவர்களிடம் எல்லாம் விரிவாக தொடர்ந்து விவாதித்து வருகிறேன். எப்படியோ எல்லோரும் சேர்ந்து இலங்கை தமிழர் அமைதியாக வாழ்ந்திட வழி வகுப்போம்.

கேள்வி: தங்கள் தோழமையில் ஒருசில ஆண்டுகளாக இருந்த கட்சிகள், தங்களிடம் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியோடு தாங்கள் தோழமையாக நீடிப்பதையே ஒரு காரணமாக சொல்லி, கூட்டணி கட்சிகளையே மதிக்கத் தெரியாத ஜெயலலிதாவிடம் அணி சேரத் துடிப்பதைப் பற்றி?

பதில்: பயணம் செய்ய ரயிலுக்கு செல்பவர்கள், அதிலே இடம் பிடிக்க ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு செல்ல நினைப்பதில்லையா? அது போன்றது தான் இதுவும்; தேர்தல் பயணமே தவிர லட்சியப் பயணம் அல்ல. தேர்தல் எப்போது என்று தெரியாத நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போன்ற கட்சிகள் மிகவும் தான் அவசரப்படுகிறார்கள். ஜெயலலிதாவை சந்திக்க சென்றவர்கள், நல்லக்கண்ணு போன்றவர்களைக் கூட அழைத்து செல்லாமல் சென்றிருப்பதில் இருந்தே, அவர்களுடைய அவசரம் தெரியவில்லையா?

ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் சென்றதாக பரதன் கூடச் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா அழைக்கக் காரணம், அவருடைய கட்சியிலே உள்ளவர்கள் வேறு எங்கும் சென்று விடாமல் இருக்க, தான் ஏதோ சுறுசுறுப்பாக இருப்பதை போல காட்டிக் கொள்ளவும், மற்றக் கட்சிகள் எல்லாம் இவரிடம் சேர்ந்து கூட்டணி அமைக்க துடித்துக் கொண்டிருப்பதை போலவும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற பார்க்கிறார். அதற்கு ஒருசிலர் இரையாகின்றனர், அவ்வளவு தான்.

கேள்வி: ``காணவில்லை- தமிழக காவல்துறை'' என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாளேட்டில் அரை பக்கத்திற்கு கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளனவே?

பதில்: இதுவும் ரயிலை பிடிப்பதற்கான ஏற்பாடு தான்!. எப்படியாவது ஜெயலலிதா முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்து விட படாதபாடு படுகிறார்கள்.

கேள்வி: விலைவாசி உயர்வை திமுக மறைக்கிறது என்று தேமுதிக தலைவர் பேசியிருக்கிறாரே?.

பதில்: ஓ! படப்பிடிப்பு முடிந்து விட்டதா?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Read more...

ஈழம் - அனைத்துக்கட்சி சட்டமன்றத்தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவென்ன - கலைஞர் பேட்டி

அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவு பற்றிய கலைஞர் பேட்டி…

சென்னை: மீனவர்கள் சுடப்பட்டு வந்த சம்பவங்கள் நின்றிருக்கின்றன. பட்டினி கிடக்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்பது தான் வேதனை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள், அவர்களுக்கு இந்தப் பிரச்சனையில் அக்கறை இல்லையா?

கருணாநிதி: அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். அவர்கள் வராதது பற்றி உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கேள்வி: ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லியிருக்கிறார்களே?

கருணாநிதி:அதைப்பற்றியெல்லாம் விமர்சிக்க விரும்பவில்லை.

கேள்வி: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

கருணாநிதி: தீர்மானத்தில் விவரமாகச் சொல்லியிருக்கிறோம். மீண்டும் நேரிலும் சந்திக்கவிருக்கிறோம். வரும் 28ம் தேதியன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரைச் சந்திப்பது என்று இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு டிசம்பர் 4ம் தேதி என் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கேள்வி: இலங்கையில் போரையே இந்திய அரசு தான் நடத்துகிறது என்று வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறாரே?. இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்களையெல்லாம் கொடுத்து போரையே மறைமுகமாக இந்திய அரசு தான் நடத்துகிறது என்கிறாரே?

கருணாநிதி: இதற்கு இந்திய அரசு பதில் சொல்லும்.

கேள்வி: இலங்கை அகதிகளையெல்லாம் தமிழகத்திலிருந்து விரட்டுவதாக தா.பாண்டியன் மீண்டும் குற்றம் சாட்டியிருக்கிறாரே?

கருணாநிதி: அது தவறான, பொய்யான தகவல். பீதியை கிளப்புகின்ற தகவல். அந்தச் செய்தியைப் பரப்பியவர் தோழர் தா. பாண்டியன். நேற்றையதினம் அதற்கு அரசு சார்பில் ஒரு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த மறுப்புக்கு மறுப்பாக, இன்றைக்கு அவர்களுடைய பத்திரிகையில் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வசந்தன் என்பவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை அந்தப் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட ஒருவரை வெளியேற்றுவது சம்மந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, இலங்கை அகதிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டதாகச் சொல்லியிருப்பது தவறான கூற்று. அவர்களுடைய ஜனசக்தி பத்திரிகையில் நான் சொன்னது தவறு என்று கட்டம் கட்டி செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

இன்று விடியற்காலை 5 மணிக்கு அதை நான் படித்துப் பார்த்து விட்டு, உடனடியாக நீலகிரி மாவட்டத்தினுடைய எஸ்பிக்கு போன் செய்து, விரிவான தகவல் கேட்டபோது, அவர் சொன்ன விளக்கம்- வசந்தன் என்பவர் எல்.டி.டி.ஈ. இயக்கத்திற்குள்ளேயே முரண்பாடு கொண்ட கருணா குழுவினருக்கு துணையாக இருந்து அந்தப் பகுதியிலே ஏராளமான பணத்தை வசூலித்து செலவு செய்து வந்தார் என்றும், அவருடைய நடவடிக்கைகள் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாக இருந்ததால், அவருடைய பதிவை ரத்து செய்து, அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு க்யூ பிரிவு கண்காணிப்பாளரிடமிருந்து அறிவுரை வந்தது என்றும், அதையொட்டித் தான் அவரை வெளியேறுமாறு, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றும் கூறினார். இந்த நோட்டீஸ் அவர் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வேறு எவருக்கும் வழங்கப்படவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 281 இலங்கை அகதிகளும், சுமார் ஒரு லட்சம் தாயகம் திரும்பிய இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் வசித்து வருகிறார்கள். இவர்கள் எவருக்கும் இவ்வகையான நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை.

கேள்வி: அனைத்துக் கட்சித் தலைவர்களையெல்லாம் பிரதமரைச் சந்திக்க டெல்லிக்கு அழைத்துப் போகப் போவதாக சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய கூட்டத்திற்கு வராத கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமா?

கருணாநிதி: எல்லோரையும் அழைப்பேன். இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்பதற்காக நான் யாரிடமும் கோபித்துக் கொண்டு அழைப்பு அனுப்பாமல் இருக்க மாட்டேன்.

கேள்வி: இன்றைய கூட்டத்திற்கே வராத கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் நீங்கள் பிரதமரை சந்திக்கச் செல்லும்போது வருவார்களா?

கருணாநிதி: நான் எதிர்பார்ப்பது தவறல்ல.

கேள்வி: இங்கிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் முறையாகத் தமிழர்களுக்குக் கிடைக்காமல் ராணுவம் தடுப்பதாக செய்தி வருகிறதே?

கருணாநிதி: இன்று காலையில் கூட முறையாக வழங்கப்படுவதாக செய்தி வந்தது. தவறு நடப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது சரியல்ல.

கேள்வி: இலங்கை போன்ற சிறிய நாடு, இந்தியா போன்ற பெரிய நாட்டை மதிக்காததற்கு என்ன காரணம்?

கருணாநிதி: டெல்லிக்குச் செல்லும்போது அதைப்பற்றியெல்லாம் விரிவாகப் பேசுகிறோம்.

கேள்வி: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தங்களை சந்திக்க வந்தபோது சில உறுதி மொழிகளையெல்லாம் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?

கருணாநிதி: மீனவர்கள் சுடப்பட்டு வந்த சம்பவங்கள் நின்றிருக்கின்றன. பட்டினி கிடக்கின்ற தமிழர்களுக்கு உணவு, அவர்களுடைய தேவைகளுக்கான உடை, மருந்து போன்றவை மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவைகளுக்கெல்லாம் மேலாக உள்ள குறைபாடு, வேதனை போர் நிறுத்தம் நடைபெறவில்லையே என்பது தான்.

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புகிறீர்கள், நிதி வசூலித்துக் கொடுக்கிறீர்கள், விரைவாக நடவடிக்கை எடுக்க முயலுகிறீர்கள். ஆனால் ஜெயலலிதா நீங்கள் பதவி விலக வேண்டுமென்று திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறாரே?

கருணாநிதி: என் மீதுள்ள பரிதாபம் தான் காரணம். இவ்வளவு கஷ்டப்படுகிறாரே என்பதற்காகத் தான் அவர் அப்படி கூறுகிறார்.

கேள்வி: மத்திய அரசு கடுமையாகச் செயல்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். மத்திய அரசுக்கு தரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று சொல்லலாம் அல்லவா?

கருணாநிதி: இப்போதுள்ள மத்திய அரசிடம், அந்த அளவிற்கு மிரட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

கேள்வி: இன்றைக்கு நடந்த கூட்டத்தில் பாமக கலந்து கொண்டுள்ளது. இது திமுக-பாமக இடையிலான பிணக்குத் தீர்வதற்கான வாய்ப்பை உருவாகியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?. ஏனென்றால் அவர்களை கூட்டணியை விட்டு விலக்கினீர்களே?

கருணாநிதி: எங்களுக்குள் ஏதும் தகராறு ஏற்படவில்லை. விலக்கியதாகச் சொல்வதெல்லாம் தவறு. அப்படிக் கூறுவது அவமரியாதையான வார்த்தைகள். யாரையும் வெளியே போ என்று சொல்கிற அளவிற்கு நாகரிகமற்றவர்கள் அல்ல நாங்கள். எங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்து கொண்டோம். அவர்கள் தங்களுடைய நிலைமையை விளக்கினார்கள். அவ்வளவு தான்.

கேள்வி: இலங்கையிலே அதிபராக ராஜபக்சே இருக்கிற வரை பிரச்சினை தீராது என்று சிலர் சொல்வதைப் பற்றி…?

கருணாநிதி: அது நம் ஆற்றல், அறிவு, வைராக்கியம், தமிழர்களுடைய ஒற்றுமை ஆகியவற்றைப் பொறுத்தது.

கேள்வி: இலங்கையிலே தனி நாடு உருவாவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா?

கருணாநிதி: அதையெல்லாம் நான் யூகித்துச் சொல்ல முடியாது.

Read more...

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP