Sunday, December 14, 2008

திருமங்கலத்தில் டிஆர் போட்டி: சிம்பு பிரச்சாரம்

சென்னை: திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் விஜய டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார்.

தனது தந்தையை ஆதரித்து நடிகர் சிம்பு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி 9ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் விஜய டி.ராஜேந்தரே போட்டியிட முடிவு செய்துள்ளார். இம்மாதம் 19ம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அன்றைய தினமே திருமங்கலம் நகரில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார் விஜய டி.ஆர்.

இதில், தனது தந்தைக்காக நடிகர் சிம்பு திருமங்கலம் தொகுதியில் 2 நாட்கள் பிரசாரம் செய்யவுள்ளார்.

Read more...

திருமங்கலம் இடைத் தேர்தல்-இன்று முதல் வேட்பு மனு தாக்கல்

மதுரை: மதுரை திருமங்கலம் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (டிசம்பர்15) தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய 22ம் தேதி கடைசி நாளாகும்.

இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அவை ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் புதிய திருப்பமாக லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி.ஆரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.




ஜனவரி 9ம் தேதி வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 12ம் தேதி நடக்கும். இந்தத் தேர்தலையொட்டி கடந்த 11ம் தேதி முதலே தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

இந்தத் தொகுதியில் மொத்தம் 1,55,647 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 76,727 பேர் ஆண்கள். 78,920 பேர் பெண்கள். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் இங்கு அதிகம்.

Read more...

இப்போது எதற்கு இடைத் தேர்தல்?-கருணாநிதி

சென்னை: தமிழகத்தில் இடைத் தேர்தலுக்கு இது நேரமி்ல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:


எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால், காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.

அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அதிமுக- காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது. அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார்.

தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத் தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி. ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் மதிமுகவே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் மதிமுக நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அதிமுக தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.

இப்போது தேர்தல் எதற்கு?:

மழை, வெள்ளம், புயல் எல்லாம் வந்து; மக்கள் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிலையில் திடீரென்று 2 மாதத்திற்குள் இடைத்தேர்தல் என்றால்; ஓர் அரசின் நிர்வாகத்திற்கு எவ்வளவு நெருக்கடி, எனவே வசதிப்படுமா? என்றெல்லாம் கூடக் கலந்து பேச வாய்ப்பின்றி; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறதே; அத்துடன் சேர்த்து இந்த திருமங்கலம் இடைத்தேர்தலை வைத்துக் கொண்டால் என்ன; என்று கேட்பதற்கும் முடியாமல்- நாடாளுமன்ற தொகுதிகள்; புதிதாக அமைக்கப்பட்டும், பிரிக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டிருப்பதால், அப்படி நாடாளுமன்றத் தேர்தலுடன் இந்த இடைத்தேர்தலை சேர்த்தால் வீண் குழப்பங்கள் நிர்வாகத் துறையில் ஏற்படும் என்பதை நாம் உணராமல் இல்லை.

அதற்காக இப்படி `விடியக் கல்யாணம்; பிடிடா பாக்கை!' என்ற பழமொழியை நினைவூட்டுகிற அளவுக்கு, இவ்வளவு அவசரமாக இந்தத் தேர்தல் வரவேண்டியதின் அவசியம்தான் என்னவோ?.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பட்ஜெட் படிக்கப்பட்டு, அதில் சலுகைகளோ, புதிய திட்டங்களோ அறிவிக்கப்பட்டால் அது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாகி விடக்கூடும் என்பதால், பட்ஜெட் அறிவிப்புக்கான பணிகளும், அதற்கு முன்னர் அவையில் படிக்க வேண்டிய ஆளுநர் உரையும் சட்டமன்றத்தில் நிறைவு பெற்றிட வேண்டியுள்ளது.

ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்...:


இந்த நெருக்கடிகள் நிறைந்த நிலையிலே திருமங்கலம் இடைத்தேர்தல் இவ்வளவு விரைவிலா என்ற கேள்வியும், ஏன் அவசரம் என்பதற்கான காரணமும் புரியாமல் இல்லை.

உடன்பிறப்பே, பார்த்தாயா; ஓர் இடைத்தேர்தல் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்று ஆளுங்கட்சியும், அப்படி அறிவித்ததை எதிர்பார்த்து இருந்ததுபோல் எதிர்க்கட்சியும், இருப்பதற்கு நம்ப முடியாத ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்.

நாடாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜெயித்துவிட்டால் அந்த உற்சாகம் நாடாளுமன்றத் தேர்தலிலும் தம்மை வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டு; கணக்கை கணக்காகச் செய்து முடித்துவிட்டுக் களிப்பிலாழ்ந்திருக்கிறார் போலும்.

உடன்பிறப்பே, உனக்கு நினைவிருக்கிறதா?, தமிழகத்தில் மொழிப்போர் நடந்துமுடிந்த பிறகு; பாளைச் சிறையில் நானும் மற்றும் பல சிறைகளில் கழக உடன்பிறப்புகள் ஆயிரக்கணக்கினரும் சிறையை விட்டு வெளிவராத சமயத்தில்; தர்மபுரியில் ஓர் இடைத்தேர்தல் - அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டது. அடடே, அவ்வளவு பெரிய மொழிப்போருக்குப் பிறகும்; இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற முடியவில்லையே என்று எல்லோரிடமும் ஓர் ஏக்கம் பிறந்தது.

ஆனால், காங்கிரஸ் நண்பர்களோ அந்த தர்மபுரி இடைத்தேர்தலின் வெற்றி; 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அச்சாரம் என்றும், அறிகுறி என்றும் நம்பினார்கள்.

ஆனால், தர்மபுரி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி அளிக்காத மக்கள்; அதைத் தொடர்ந்து 1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுகவைத்தான் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைக்கிற அளவுக்கு வெற்றியை வழங்கினார்கள்; என்பதைக் கடந்தகால வரலாறு சுட்டிக்காட்டத் தவறவில்லை என்ற உண்மையை மறந்து விடக்கூடாது!.

மறவாமலும் மன திடத்துடனும் பாகு மொழி, பசப்பு மொழி பேசிப் பாராட்டிய கட்சிகள்கூட `எஸ்மா', `டெஸ்மா' சட்டங்களை நீட்டியவர்களை நோக்கி ``உஜார் உஜார்!'' என்று உரத்த குரல் எழுப்பியதை விடுத்து; இப்போது உமிழ்ந்த வாய்க்கே சர்க்கரை என உரைத்துக் கொண்டு; நம்மைப் பின்னிருந்து குத்திக் கிழித்திட முன்வருகிறார்கள் என்றால்;

அத்தகையோர்க்கு; நன்றிக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தொலைவு? நட்புக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? என்று நெஞ்சு கொதித்திடக் கேட்கத்தான் தோன்றும் உனக்கு!.

அன்பு உடன்பிறப்பே, அண்ணா தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் முக்கணைகளையும் பயன்படுத்திப் பலன் காண, பகைமுகாம் நோக்கிப் பணியாற்றிடக் கிளம்புக! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Read more...

டிச 27ல் திமுக பொதுக் குழு கூடுகிறது

தலைவர், பொதுச் செயலரை தேர்ந்தெடுக்க தி.மு.க பொதுக்குழு கூ‌ட்ட‌ம் வரு‌ம் 27ஆ‌ம் தேதி செ‌ன்னை‌யி‌ல் நடைபெறு‌கிறது எ‌ன்று க‌ட்‌சி‌யி‌ன் பொதுச்செயல‌ர் அன்பழகன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

TN.Gov.TNG
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக பேரியக்கமாம் தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் வரு‌ம் 27ஆ‌ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் கட்சித் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்தலும், தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட பேரியக்கமாம் தி.மு.க., அண்ணா வகுத்தளித்த நெறிமுறைகளின்று சிறிதும் பிறழாமல், தலைவர் கருணாநிதியின் தலைமையின் கீழும் அவரது வழிகாட்டுதலோடும் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஆற்றியுள்ள பணிகள் ஏராளம்.

உலகம் எங்கும் வாழும் தமிழர்களுக்கு எல்லாம் பெரும் காவல் அரணாகத் திகழும் தி.மு.க., ஆட்சியில் இருக்கிற காலங்களில் மக்களுக்கு செய்திருக்கிற நன்மைகளை பட்டியலிட்டால் பக்கங்கள் காணாது. எதிர்க்கட்சி வரிசையில் அமருகிற காலங்களிலும் தலைவர் கருணாநிதியும், அவர் வழிநடத்தும் கட்சியும், தமிழர் நலனுக்காக செய்திட்ட தியாகங்களை எடுத்துரைத்தால் விழிகளில் நீர் பெருகும். அத்தகைய தியாக வரலாறு கண்டது தி.மு.க.

'ஒரு இனத்தின் நலன் காக்க இத்தனை ஆண்டு காலம் இடைவிடாமல், அயராமல் பாடுபடுகிற தி.மு.க. போன்று ஒரு இயக்கம் உலகில் இதுவரை தோன்றிடவில்லை' என்று மாற்றுக்கருத்து கொண்டவர்களும் மனமுவந்து பாராட்டும் அளவுக்கு தி.மு.க.வும் தலைவர் கருணாநிதியும் பிரித்துப் பார்க்க முடியாத இருபெரும் சக்திகளாக திகழ்வது கட்சியினர் எல்லாம் பெருமிதம் கொள்ளக்கூடிய ஒன்று.

உலகத்தில் அனைத்து இயக்கங்களும் தலைசிறந்த முன்னோடி இயக்கமாகத் திகழும் தி.மு.க., ஜனநாயக வழிகளின்று சிறிதளவும் பிறழாமல் அதன் ஆயிரம் கிளை நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவும் அதன் வாயிலாக கட்சியின் ஏனைய அமைப்புகளுக்குரியோர் முறையாக தேர்ந்தெடுக்கப்படவும் தேர்தல்களின் நிறைவாக கட்சித் தலைமை நிர்வாகிகள் வரை ஜனநாயக முறை தழைத்தோங்க கண்ணும் கருத்துமாக பணியாற்றுபவர், பாடுபடுபவர் தலைவர் கருணாநிதி.

தி.மு.க.வின் 13-வது பொதுத்தேர்தல்களுக்கான நடைமுறைகளை வழக்கம்போல் கட்சி உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தலுக்கான அறிவிப்புடன் தொடங்கியது கட்சித் தலைமை. கடந்த ஜனவரி மாதம் 21ஆ‌ம் தேதியன்று தொடங்கிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் மே மாதம் 31ஆ‌ம் தேதி முடிவடைந்தன.

95 ஆயிரம் கிளைகளையும், ஒரு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் கொண்ட தன்னகரில்லா இயக்கமாம் தி.மு.க. 4 கட்ட தேர்தல் நடைமுறைகளை கொண்டது. முதல்கட்டமாக, பேரூர், நகர, ஒன்றிய மாநகரங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளும் மேலமைப்பு பிரதிநிதிகளும், பேரூர், ஒன்றிய, நகர, மாநகர நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர். இது 2-ம் கட்ட தேர்தல் ஆகும்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர், ஒன்றிய, நகர, மாநகர நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்தனர். இது 3-ம் கட்ட தேர்தல். மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் முடிந்து கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் 4-ம் கட்ட தேர்தல் இந்த பொதுக்குழுவில் நடைபெறுகிறது.

ஈடு இணையில்லா இயக்கமான தி.மு.க.வின் தலைவராக, பேராற்றல்களின் அபரிமிதமான திறமைகளின் ஒருவராக திகழும் தலைவர் கருணாநிதி இதுவரை 9 முறை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எ‌ன்று அ‌ன்பழக‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Read more...

Saturday, December 13, 2008

தமிழக சுற்றுலாத் துறைக்கு 3 விருதுகள் : அமைச்சர் சுரேஷ்ராஜன் பெருமிதம்!

செய்தி 1

கோவை : "சிறப்பாக செயல்பட்டதற்காக, மூன்று விருதுகளை தமிழக சுற்றுலாத் துறை பெற்றுள்ளது' என, சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார். "விருந்தோம்பல் 2010' தேசியக் கருத்தரங்கு, கோவை நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை சார்பில், நேற்று, துவங்கியது.


கருத்தரங்கை துவக்கி வைத்து, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியதாவது:திருக்குறளில் கூறப்பட்டுள்ள விரும்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழக சுற்றுலாத்துறை செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு 2005ம் ஆண்டில் 3.46 கோடி, 2006ல் 4.05 கோடி, 2007ல் 5.24 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.தேசிய அளவில், 2007ம் ஆண்டில் மட்டும், சுற்றுலா வளர்ச்சி 29.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.தமிழக சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்பட்டதற்காக மூன்று விருதுகளை பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுலாத் துறைக்காக 49 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை சிறப்பாக செயல்பட மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மிக அவசியம். தமிழகத்தில் வால்பாறை, ஏலகிரி, கொல்லிமலை, சிறுமலை, செட்டிநாடு, தரங்கம்பாடி ஆகிய இடங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசினார்.

செய்தி - 2

கோவை : ""மும்பை தாக்குதல் காரணமாக, தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது,'' என்று சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில், "சுற்றுலா அலுவலகம்' நேற்று திறக்கப்பட்டது. தமிழக கால்நடை பராமரிப்பு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி திறந்து வைத்தார்.சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு, கலெக்டர் பழனிகுமார், வால்பாறை எம்.எல்.ஏ., கோவை தங்கம் உட்பட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.


விழா முடிந்த பின், சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் அளித்த பேட்டி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான ஓட்டல்களை மேம்படுத்த, கடந்த இரு ஆண்டுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க, சுற்றுலாத் தலங்களில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.தமிழகத்திலுள்ள சுற்றுலா மையங்களை மேம்படுத்த, இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு அலுவலகம் என 14 சுற்றுலா அலுவலகங்கள் செயல்படுகின்றன. தவிர, திருவண்ணாமலை, கோவை, வேலூர் மற்றும் செட்டிநாடு ஆகிய நான்கு இடங்களில், முழு தகவல்களைக் கொண்ட சுற்றுலா அலுவலகம் திறக்கப்படுகிறது. தற்போது, கோவையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து 17 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். இதே போல, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 5.5 கோடி பேர் வருகை தந்துள்ளனர்.



மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக, தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான ஓட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது, நாளடைவில் சரியாகி விடும்.வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு போதிய வசதி இல்லை. இதை நிவர்த்தி செய்ய, ஒரு ஏக்கர் பரப்பளவில் "யாத்ரா நிவாஸ்' எனும் விருந்தினர் மாளிகை, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். வால்பாறையில் படகு இல்லம், பூங்கா ஆகியவை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



இதற்கான திட்ட மதிப்பீடு, கலெக்டரிடம் கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் இத்திட்டம் நிறைவேற்றப்படும். தற்போது, கோவை, குற்றாலத்தில் 36 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயில் வாகனங்கள் நிறுத்தும் இடம், பூங்கா அமைப்பு, பார்வையாளர் மாடம், நீரோடையின் குறுக்கே நடைபாதை அமைத்தல், தகவல் பலகை அமைத்தல் பணிகள் நடந்து வருகின்றன.டாப்சிலிப் இந்திரா காந்தி புலிகள் காப்பக மேம்பாட்டுக்காக, ஒரு கோடியே 96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்துதல், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பார்வையாளர் மாடம், பூங்கா அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் வளாகத்தில், 68 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் உடை மாற்றும் அறைகள், கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் ஓய்வு அறைகள் கட்டும் பணி நடக்கிறது.இவ்வாறு அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.



பொங்கலுக்கு கோவையில் "சங்கமம்' : அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறுகையில், ""கோவை மாவட்டமானது, சுற்றுச்சூழல், செழிப்புடன் கூடிய பல சுற்றுலா மையங்களைக் கொண்டுள்ளது. வால்பாறை, மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் என ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இங்குள்ளன. இங்கு, அதிகளவு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க வேண்டுமென்பதற்காக, கோவையில் சுற்றுலா அலுவலகம் திறக்கப்பட்டு, தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டுப்புறக் கலைகள் அழியாமல் பாதுகாக்கவும், நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், சென்னையில் "சங்கமம்' நிகழ்ச்சி நடந்தது. வரும் பொங்கல் விடுமுறையின் போது, கோவையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்,'' என்றார்.


Read more...

சமையல் காஸ் விலையை குறைக்க வேண்டும் : கனிமொழி

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததைப் போல, சமையல் காஸ் விலையையும் குறைக்க வேண்டும் என, ராஜ்யசபாவில் தி.மு.க., எம்.பி., கனிமொழி கோரிக்கை விடுத்தார்.


ராஜ்யசபாவில் சிறப்புத் தீர்மானம் ஒன்றின் மூலம் இந்தப் பிரச்னையை எழுப்பிய அவர் பேசியதாவது:

பெட்ரோல், டீசல் விலை கடந்த வாரம் குறைக்கப்பட்டது. அதேபோல், சமையல் காஸ் விலையையும் குறைக்க வேண்டும். சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு முன்னர் 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. அந்த விலை உயர்வை வாபஸ் பெற்று, மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வந்தால், மத்திய தர மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைவர்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி ஆதரவு : : அவரின் இந்தக் கோரிக்கைக்கு, பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட போது, சமையல் காஸ் விலையையும் குறைக்க வேண்டும் என கோரி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதேநேரத்தில், நேற்று லோக்சபாவில் பேசிய சமாஜ்வாடி, -ராஷ்டிரிய ஜனதா தளம்,- தி.மு.க., மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், டீசல் மற்றும் சமையல் காஸ் விலையை குறைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் கூறுகையில், "டீசல் விலை இரண்டு ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. அதுபோதாது, லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும். கம்பெனிகள் விஷயத்தில் அக்கறையோடு நடந்து கொள்ளும் அரசு, நுகர்வோர் விஷயத்திலும் அக்கறை காட்ட வேண்டும்' என்றனர்.

Read more...

மறக்க முடியாத சாதனை: ஸ்டாலின் பெருமிதம்!!

ராமநாதபுரம் : உள்ளாட்சித்துறை சார்பில் எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் என் வாழ்நாளில் மறக்க முடியாத சாதனை என கருதுவது ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் தான் என தமிழக அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ராமநாதபுரம் சீதக்காதிசேதுபதி விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த விழாவில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு சுழல்நிதி , நலத்திட்ட உதவிகள், கட்டடங்கள், புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் மற்றும் 480 கட்டடங்களை திறந்து வைத்து அவர் பேசியதாவது :

616 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளில் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஏப்ரலில் அனைத்து பணிகளும் முடிந்து விடும் என அதிகாரிகள் கூறினர். வரும் ஜனவரியில் திட்டம் செயல்படவேண்டும் என கேட்டுள்ளேன். தமிழர் திருநாள் அன்று திட்டம் துவக்கி வைக்கப்படும். இதில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொள்வார்.


வங்கிகள் மூலம் 4 லட்சம் குழுக்களுக்கு 3 ஆயிரத்து 811 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. சுயஉதவிகுழக்களின் பரிமாற்றத்துக்காகவே இந்தியாவில் 16 இடங்களில் கிளைகள் துவங்கப்பட உள்ளன. அதில் 10 கிளைகள் தமிழகத்தில் செயல்பட உள்ளது.

மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு தொடர்ந்து இந்த அரசு பல உதவிகளை வழங்கும்.இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்கப்பட்ட போது அதனை வரவேற்றவர்கள் தற்போது குறை கூறுகிறார்கள். ஆனால் ரேஷன்கடைகளில் அரிசி மட்டுமன்றி 50 ரூபாயில் மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது.இவ்வாறு அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.


அமைச்சர் தங்கவேலன் தலைமை வகித்தார். கலெக்டர் கிர்லோஷ்குமார் வரவேற்றார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜகண்ணப்பன், முருகவேல், ஹசன்அலி, ராம்பிரபு, மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, ஒன்றியக்குழு தலைவி கலைமதி , நகராட்சிதலைவி லலிதகலா பேசினர்.

Read more...

கட‌ன் வழ‌ங்குவ‌தி‌ல் இ‌ந்‌தியா‌விலேயே த‌மிழக‌ம் 2‌வது இட‌ம்: மு.க.ஸ்டாலின்

சனி, 13 டிசம்பர் 2008( 10:10 IST )

''மகளிர் சுய உதவி‌குழுவினருக்கு கடன் வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழகம் 2வது இடம் வகிக்கிறது'' எ‌ன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

webdunia photoFILE
மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு சுழல்நிதி வழங்கும் விழா, வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, கட்டடங்கள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராமநாதபுரத்தில் நடந்தது. ‌விழா‌வி‌ற்கு அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமை வகித்தார்.

விழாவில், மகளிர் சுய உதவி‌க் குழுக்களுக்கு ரூ.18.28 கோடி நிதி வழங்கியும், ரூ.13.54 கோடி மதிப்பில் 16 வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.56.92 கோடியில் முடிக்கப்பட்ட 480 பணிகளை திறந்து வைத்து அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகை‌யி‌ல், தமிழகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுவினர் 3,811 கோடி வங்கிக்கடனாக பெற்றுள்ளனர்.

மகளிர் சுய உதவி‌க் குழுவினருக்கு கடன் வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழகம் 2ம் இடம் வகிக்கிறது. 99 ‌விழு‌க்காடு கடன் முறையாக திருப்பி செலுத்தப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு ஜனவரி 2007ல் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இப்போது 95 ‌விழு‌க்காடு பணிகள் முடிந்துள்ளன. குடிநீர் விநியோகத்தை, தமிழ்ப்புத்தாண்டான பொங்கல் திருநாளில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

திருமண நிதி உதவி திட்டம், தமிழகம் போல் இந்தியாவில் வேறெங்கும் செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தில், இதுவரை 42,787 பெண்களுக்கு ரூ.64.57 கோடி வழங்கப்பட்டுள்ளது. இலவச எரிவாயு இணைப்பு 6.84 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.1 அரிசி வழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஜெயலலிதா, குழம்பு வைக்க முடியாத அளவுக்கு மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக குறை கூறினார். இப்போது மளிகை பொருட்களும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன எ‌ன்று மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.



Read more...

கருணா‌நி‌தியுட‌ன் இ‌‌‌ங்‌கிலா‌ந்து தூத‌ர் ச‌ந்‌தி‌ப்பு

செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை இ‌ந்‌‌தியாவு‌க்கான இ‌ங்‌‌கில‌ா‌ந்து தூத‌ர் ச‌ர் ‌ரி‌ச்ச‌ர்‌ட் ‌ஸ்டா‌க் ம‌ரியாதை ‌நி‌மி‌த்தமாக இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

TN.Gov.TNG
இ‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌‌ன் போது, செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இ‌ங்‌கிலா‌ந்து துணை‌த் தூத‌ர் மை‌க் கான‌ர், தலைமை‌ச் செயலாள‌ர் ஸ்ரீப‌தி, ‌நி‌தி‌த்துறை முத‌ன்மை‌ச் செயலாள‌ர் ஞானதே‌சிக‌ன், பொது‌‌த்துறை செயலாள‌ர் தேவ ஜோ‌தி ஜெகராஜ‌ன் ஆ‌கியோ‌ர் உ‌‌ட‌ன் இரு‌ந்தன‌ர்.

Read more...

எ‌வ்வளவு ப‌யி‌ர்க‌ள் சேத‌ம் அடை‌ந்தாலு‌ம் ‌நிவாரண‌ம் : கருணாநிதி

'ஒரு விவசாயிக்குச் சொந்தமான எவ்வளவு ஹெக்டேர் பயிர் சேதமடைந்தாலும் அனைத்துக்கும் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது'' என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூறியுள்ளார்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

வெள்ள நிவாரண விநியோகத்தில், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி கடந்த 11.12.2008 அன்று சாலை மறியல் போராட்டத்தில் இரு கம்யூனிஸ்டு கட்சிகள், அ.தி.மு.க., ம.தி.மு.க., அவற்றின் அணியினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் எவ்வளவு பேர் கைதானார்கள்?

ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் கைதானார்கள் என்றும்; பின்வரும் மாவட்டங்களான தஞ்சாவூரில் 3,250 பேரும், திருவாரூரில் 1,960 பேரும், புதுக்கோட்டையில் 569 பேரும், நாகப்பட்டினத்தில் 2,077 பேரும், கடலூரில் 1,562 பேரும், ஆக மொத்தம் 9,418 பேர் சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சாலை மறியலின்போது கைதாகினர் என்று காவல்துறை கூறுகிறது.

"சாலை மறியல் செய்து கைதான விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாண்டியன் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

"கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போன்ற சட்ட விரோத செயல்களை அரசு அனுமதிக்காது; நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று முன்கூட்டி அறிவுறுத்தப்பட்டதை நினைத்துக் கொண்டு; ஒருவேளை அவர்களெல்லாம் விடுதலை செய்யப்படவில்லையோ என்ற எண்ணத்தில் தோழர் பாண்டியன் அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்க கூடும். இது என்ன; "எஸ்மா'', "டெஸ்மா'' ஆட்சியா? கைது செய்யப்பட்ட 9,418 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்பதை பத்திரிகை செய்தியாளர்களும், பாண்டியனும் தெரிந்து கொள்ளாததுதான் நமக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது.

பயிர்ப்பாதுகாப்பு "இன்ஸ்சூரன்ஸ்'' திட்டத்தில் தம் பெயரையும் பதிவு செய்து கொண்டுள்ள விவசாயிகள்; தங்கள் பயிர் இழப்பீட்டுக்கான நிவாரணத் தொகையையும் சேர்த்து; மொத்தம் எவ்வளவு இழப்பீடு பெறுகிறார்கள்?

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு அரசு வழங்குகிற ஏழாயிரத்து ஐநூறு ரூபாயுடன், பயிர்ப்பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் கிடைக்கக் கூடிய இழப்பீட்டையும் சேர்த்தால் குறைந்தபட்சமாக மொத்தம் பத்தாயிரம் ரூபாய் வரையில் ஒரு விவசாயி நிவாரணம் பெற்று பயன்பெற முடியும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாயும், முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இரண்டு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளார்களே?

இது போன்ற இயற்கை சீற்ற பாதிப்புகளில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் இருக்கும் கம்யூனிஸ்டு அரசு; எவ்வளவு நிவாரணத் தொகை அளிக்கிறதோ; அதைக் காட்டிலும் அதிகமாக ஆயிரம் ரூபாய் அளித்திட இந்த அரசு நிச்சயமாக முன்வரத் தயாராகவே இருக்கிறது.

வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக வழங்கிட மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள தொகை எவ்வளவு? தமிழக அரசு வழங்கிடும் தொகை எவ்வளவு?

புயல், பெருமழை வெள்ளத்தின் காரணமாக உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி என்று மத்திய அரசு வரையறை செய்துள்ளதற்கு மாறாக; தமிழக அரசு அதனை அதிகப்படுத்தி ரூ.2 லட்சம் வழங்குகிறது. சேதம் அடைந்த பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 வழங்குகிறது.

சேதம் அடைந்த பயிர்களுக்கு ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர் வரைதான் நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயம் செய்துள்ளது; ஆனால் தமிழக அரசு அதற்கு மாறாக; அந்த உச்சவரம்பை நீக்கி, ஒரு விவசாயிக்கு சொந்தமான எவ்வளவு ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்திருந்தாலும் அனைத்துக்கும் நிவாரண நிதி வழங்கி வருகிறது.

பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கலாம் என்று மத்திய அரசு ஆணையிட்டிருந்த போதிலும்; தமிழக அரசு அந்த 2 ஆயிரம் ரூபாயுடன் 10 கிலோ அரிசியும் இலவசமாக வழங்குகிறது.

முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு இலவசமாக வேட்டிகள், சேலைகள் வழங்க வேண்டும்; அவர்தம் குடும்பங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் இருந்தால் அவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க வேண்டும் என்பதெல்லாம், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் இல்லை; எனினும், தமிழக அரசு அவற்றை வழங்கி வருகிறது.

இது மாதிரி இயற்கை இடர்ப்பாடுகள் ஏற்படுகிற போது மட்டுமல்லாமல், ஏனைய சந்தர்ப்பங்களிலும் விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு நிர்ணயிக்கின்ற தொகையை காட்டிலும் அதிகமாகவே தமிழக அரசு வழங்கி வருகிறது. எடுத்துக்காட்டுகள் வேண்டும் என்றால், சாதாரண ரக நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை; குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி வழங்கி வருகிறது; சன்ன ரக நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை குவிண்டால் ஒன்றுக்கு 930 ரூபாய்; மாநில அரசு குவிண்டால் ஒன்றுக்கு 1,050 ரூபாய் என்று அதிகரித்து வழங்கி வருகிறது.

தமிழகத்திற்கு வந்து மழை, வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்த மத்திய குழு, தமிழக அரசு செய்து வரும் வெள்ள நிவாரணப்பணிகளை பாராட்டியுள்ளதே?

தமிழகத்திற்கு வந்த மத்திய குழுவின் தலைவர் ஸ்கந்தன் ஐ.ஏ.எஸ்., "மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்தது போல் இங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும், அதிகாரிகளும் மக்களுடன் இணைந்து நல்ல முறையில் உதவி செய்துள்ளனர். இல்லையெனில் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். கலெக்டர்கள், அதிகாரிகள் ஆகிய அனைவரையும் நாங்கள் பாராட்டுகிறோம்'' என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் நிவாரணப்பணிகளை அனைத்து தரப்பினரும் பாராட்டியே வருகின்றனர் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

Read more...

காவல‌ர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் ‌நி‌தியுத‌வி: கருணாநிதி

வெள்ளி, 12 டிசம்பர் 2008( 15:05 IST )

திரு‌வ‌ண்ணாமலை‌யி‌ல் பாதுகா‌ப்பு ப‌ணி‌யி‌‌ல் ஈடுப‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ந்தபோது மரண‌ம் அடை‌ந்த காவல‌ர் ச‌ந்‌திர‌ன் குடு‌‌ம்ப‌த்து‌க்கு ரூ.2 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி வழ‌ங்‌கிட முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபம் தொடர்பான பாதுகாப்பு பணிக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்ற தமிழ்நாடு காவல்துறை தலைமை காவலர் சந்திரன் இன்று இயற்கை எய்தினார்.

இதையொட்டி அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் இறந்த காவலர் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் உடனடியாக வழங்கிடவும், அவரது வாரிசுதாரர் ஒருவருக்கு அரசுப்பணி அளித்திடவும் ஆணையிட்டுள்ளார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Read more...

தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு வேண்டும்-கருணாநிதி

Karunanidhi
சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்துப் பள்ளிகள், அனைத்துக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

திராவிடர் கழகம் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் படத்திறப்பு விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் நடந்தது. முதல்வர் கருணாநிதி வி.பி.சிங் படத்தைத் திறந்து வைத்து பேசுகையில்,

வி.பி.சிங் அவர்களுக்கு ஒரு நினைவு சின்னம், என்றென்றும் தமிழ்நாட்டு மக்களுடைய நெஞ்சிலே நிலைக்கக்கூடிய சின்னம் அமைத்திட வேண்டும். அது எப்படி, எவ்வாறு, என்றைக்கு என்பதையெல்லாம் கலந்துதான் தீர்மானித்து அறிவிக்க வேண்டும் என்று தமிழர் தலைவர் வீரமணி ஆணை பிறப்பித்துள்ளார்.

இதை நான் இங்கேயே அறிவிப்பது, என்னைப் பொறுத்தவரையில் ஒரு விளம்பரமாகத்தான் ஆகும் என்பதால், நான் வீரமணியுடன் கலந்துபேசி, அந்த நினைவுச் சின்னம் எப்படி அமைய வேண்டும், எங்கே அமைய வேண்டும், எந்த வகையிலே அமைய வேண்டும், எத்தகைய நினைவுச் சின்னமாக அது இருத்தல் வேண்டும் என்பது பற்றி விரைவில் அறிவிப்பேன் என்பதை, மன்னிக்கவும்-விரைவில் அறிவிப்போம்.

மண்டல் கமிஷன் பல ஆண்டுகளாக, ஏன் இந்தியாவில், தமிழ்நாட்டில் எல்லோருடைய வாயிலும் விளையாடிய ஒரு சொல்-உச்சரிக்கப்பட்ட ஒரு சொல். இதை பல ஆண்டுகளுக்கு முன்பே மத்தியிலே காங்கிரஸ் அரசு உருவாக்கியது என்றாலுங்கூட, அந்த மண்டல் குழு செய்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துகின்ற காரியத்திலே இறங்காமல், , அதைக் கிடப்பிலே போட்டு வைத்தார்கள்.

அந்தக் கட்சியின் ஆட்சியிலே மத்தியிலே சில காலம் மிகப்பொறுப்பான அமைச்சர் பதவிகளை எல்லாம் வகித்து, பின்னர் அந்த பொறுப்பிலே இருந்து விலகி வெளிவந்து, ஒரு கட்சியை உருவாக்கி, அந்த கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டு, அதன்பிறகு நம்மைப் போன்றவர்களுடைய தொடர்பெல்லாம் அவருக்கு ஏற்பட்டு, அதன் காரணமாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏறெடுத்துப் பார்த்து, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்கிற உயர்ந்த உள்ளத்தோடு வி.பி.சிங் பணியாற்றத் தொடங்கினார்.

1990ம் ஆண்டு வாக்கில் வி.பி.சிங், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வெளியிட்டு, ஆணை பிறப்பித்து, இதை நாடு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியபோது, எத்தகைய புரட்சிகளெல்லாம் நடைபெற்றன?.

எத்தனைபேர் தீக்குளிக்க வைக்கப்பட்டார்கள், எத்தனை மாணவர்களை அந்த போராட்டத்தில் ஈடுபடுத்தினார்கள். யார் அந்த மாணவர்கள்? உயர் குலத்திலே பிறந்த மாணவர்கள், அக்ரகாரத்துப் பிள்ளைகள்.

நடுத்தர மக்களால், ஏழை எளிய மக்களால், சூத்திரர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் இந்த மண்டல் கமிஷனுக்கு ஒரு சிறப்பு வந்துவிடக்கூடாது. மண்டல் கமிஷன் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக, அவர்களைத் தூக்கிவிடுகின்ற கருவியாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக வி.பி.சிங் கொண்டுவந்த அந்த ஆணையை எதிர்த்து பெரும் புரட்சியே வடபுலத்திலே நடைபெற்றது.

அந்த புரட்சி நடைபெற்றதன் காரணமாக வி.பி.சிங் தன்னுடைய பதவியை துச்சமாகக் கருதி தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்தார். அப்படி வெளியே வந்தபோது இந்தியாவிலேயே முதன்முதலாக சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அவரை வரவேற்றது திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

அவரை ஆதரித்தாலே ஆபத்து, ஆட்சி பறிபோகும் என்று தெரிந்தும், அந்த ஆட்சியைப் பற்றி கவலைப்படாமல் வி.பி.சிங்கை, ஆதரித்ததற்கு காரணம் எங்களுக்கு கோட்டையோ கொலுமண்டபமோ பெரிதல்ல, கோலோச்சுவதும் பெரிதல்ல, கொள்கைதான் பெரிது என்பதற்காகத்தான் அன்றைக்கு வி.பி.சிங் அவர்களுக்கு பெரும் வரவேற்பு இங்கே அளித்தோம்.

வீரமணி பேசும்போது, வி.பி.சிங்கிற்கு நினைவுச் சின்னம் பற்றி சொன்னார். ஒரு இடத்திலே வி.பி.சிங்கிற்கு சிலையோ அல்லது ஒரு மண்டபமோ எழுப்புவதால் மாத்திரம் நாம் அவருக்கு பெருமை சேர்த்தவர்களாக ஆகமாட்டோம்.

அவர் மண்டல் கமிஷன் மூலமாக எந்த விடியலை நாட்டில் எதிர்பார்த்தாரோ, அந்த விடியல் ஏற்பட இடஒதுக்கீட்டில் இன்னும் எல்லா இடங்களிலும் அந்த இடஒதுக்கீட்டை கொண்டுவர எல்லா கல்லூரிகளிலும், எல்லா பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களிலும்கூட இடஒதுக்கீட்டை கொண்டு வர நாம் பாடுபட வேண்டும்.

அதுதான் வி.பி.சிங்கின் விருப்பம், கனவு. அந்த கனவை நாம் நிறைவேற்றுவோம். அதைச் சொல்லுகிற காரணத்தால் வீரமணி சொன்ன நினைவுச் சின்னத்தை தட்டிக் கழிக்கிறேன் என்று அர்த்தமல்ல.

வி.பி.சிங்கினுடைய சிலையை நாடாளுமன்றத்துக் கட்டிடத்திலே வைப்பதற்கும் நாம் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக செய்ய வேண்டும். இப்போது இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மீண்டும் தேர்தலுக்கு நின்று நீங்கள் அவர்களையெல்லாம் வெற்றி பெறச் செய்து அவர்களைக் கொண்டே நாடாளுமன்ற வளாகத்திலே வி.பி.சிங் அவர்களுடைய சிலையை வைப்பதற்கான அந்தப் பணியை நீங்களும் சேர்ந்து செய்யவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

Read more...

Tuesday, December 9, 2008

ஜெ. ஆட்சியின் ஆட்டத்தை இடதுசாரிகள் மறந்து விட்டனர் - கலைஞர்!

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 9, 2008, 16:45

சென்னை: திமுக அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசும் என்ற குருட்டு நம்பிக்கையில், அதிமுகவுடன் கூட்டணி சேர இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டி போடுகின்றன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து முரசொலியில் தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது
சட்டசபைத் தேர்தலில் கணிப்புகளைத் தாண்டி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது காங்கிரஸ். சமீபத்திய மும்பை தாக்குதல் சம்பவத்தாலும், விலைவாசி உயர்வாலும் மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் மக்கள் அதை நிராகரித்து விட்டனர்.லோக்சபா தேர்தலுக்கு முன்னோடியாக இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு இருக்கும் என்று கூறப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் என்றனர். ஆனால் ஐந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரஸ் வென்றுள்ளது.

இதன் மூலம் மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளில் மக்கள் இன்னும் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளது வெளிப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல் முடிவு மதவாத சக்திகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. டெல்லியில் பெரும்பான்மை பலத்துடனும், ராஜஸ்தானில் பாஜகவிடமிருந்து ஆட்சியைப் பறித்தும், மிஸோரமில் சாதனை வெற்றியையும் பதிவு செய்துள்ளது காங்கிரஸ்.
இது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வழிகாட்டுதலில், திறமையான பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளுக்கு மக்கள் கொடுத்துள்ள பரிசாகும்.ஆட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தி அலையை வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அந்த அலையை டெல்லியில் வாக்காளர்கள் தோற்கடித்துள்ளனர். 3வது முறையாக அங்கு காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர்.
மக்களின் நலன்களை பார்த்துக் கொள்ளும் அரசை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதே இந்தத் தேர்தலின் முடிவுகள் விளக்குகின்ரனமும்பைத் தீவிரவாத தாக்குதல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள் மக்கள் என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் அதை மக்கள் பொய் என்று நிரூபித்து விட்டனர். இதுபோன்ற நிலைக்கு ஆளுங்கட்சி மட்டுமே காரணம் இல்லை என்பதை மக்கள் தெளிவாக்கியுள்ளனர்.
அதிமுகவின் ஆட்டத்தை மறந்த இடதுசாரிகள்
தமிழகத்தில் திமுக நல்லாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், திமுக அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசும் என்ற குருட்டு நம்பிக்கையில், அதிமுகவுடன் கூட்டணி சேர போட்டி போட்டு போய்க் கொண்டுள்ளன.
கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது அது எப்படியெல்லாம் ஆட்டம் போட்டது என்பதை இந்த கட்சிகள் அனைத்தும் உணர்ந்திருந்தும் கூட, அதிமுகவுடன் கூட்டணி சேர முனைகின்றன.
இந்தக் கட்சிகளுக்கெல்லாம் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Read more...

Monday, December 8, 2008

பா‌ர்‌ப்பன சமுதாய‌த்‌தி‌ல் ப‌ண்பா‌ர்‌த்த மேதைகளை போற்றிட தவறவில்லை : கருணாநிதி

திராவிட இயக்கத்தில் இளமைக் காலந்தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்றாலும்; பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிடத் தவறியதில்லை எ‌ன்று முதலமைச்சர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கலையில், இலக்கியத்தில், நாட்டுப்பற்றுக்கான தியாகத்தில் ஈடுபட்டு மறைந்து விட்டவர் குடும்பங்களின் வழித் தோன்றல்களைப் பெருமைப்படுத்துவதும்; அவர்களின் குடும்பம் வாடாமல் தழைத்திடச் செய்வதும் கடமையெனக் கொண்டு; ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆவன செய்து வருகிறேன் என்பதை நீயும் அறிவாய், இந்த நாடும் அறியும். இந்த அரும்பணியை மேற்கொண்டுள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்புகளாக அமைந்தவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். திராவிட இயக்கத்தில் இளமைக் காலந்தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்றாலும்; பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிடத் தவறியதில்லை.

மகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. அய்யர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா.கல்கி, ஏ.எஸ்.கே. அய்யங்கார், வெ.சாமிநாதசர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு. எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டை விரித்துரைக்க வேண்டுமென்றால், "அக்கிரகாரத்து அதிசய மனிதர்'' என்று "வ.ரா.'' அவர்களைச் சிறப்பித்து எழுத் தோவியம் தீட்டிய அறிஞர் அண்ணாவின் தம்பி என்ற முறையில் "வ.ரா.'' மறைந்த பிறகும், எழுத்துத்துறை பிதாமகன் எனப்படும் "சாவி'' மூலம் அந்தக் குடும்பத்துக்கு சிறப்பு செய்தவனாவேன், நான்!

1990ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது, வ.ரா. அவர்களின் துணைவியார் புவனேஸ்வரி அம்மையாரை தலைமைச் செயலகத்திற்கே அழைத்து வரச் செய்து, மாதந்தோறும் அவருக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்பதற்கான ஆணையினை அவர்களிடம் ஒப்படைத்தேன். 17.8.1990 அன்று கலைவாணர் அரங்கில் வ.ரா. அவர்களின் நூற்றாண்டு விழாவினை அரசு சார்பில் கொண்டாடினோம்.

திருக்குறள் தந்த அய்யன் வள்ளுவனின் திருவுருவத்தைப் பலரும் பலவிதமாகச் சித்திரித்த நிலையில் ஒரே மாதிரி; அய்யனின் உருவத்தை வரைந்தளிக்க வேண்டுமென்ற பெருந்தமிழறிஞர்களின் கருத்தையேற்று; அனைவரும் ஒப்பும் வகையில் அய்யன் திருவள்ளுவர் உருவத்தை அழகுற தீட்டித் தந்து, அதனை அரசின் வாயிலாகப் பிரசுரிக்கும் வகையையும் வழங்கிய ஓவியப் பெருமகனார் வேணுகோபால் சர்மா அவர்களைப் பெருமைப்படுத்தியதுடன், அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்கும் நிதியை வழங்கிய பெருமை நமது அரசுக்கு உண்டு.

17.2.1985 அன்று நான் எழுதிய "குறளோவியம்'' நூல் வெளியீட்டு விழாவிற்கு வேணுகோபால் சர்மா அவர்களை தேடிப் பிடித்து அழைத்து வரச் செய்து அந்த நூல் எழுதியதன் மூலம் எனக்குக் கிடைத்த தொகையில் ரூபாய் பத்தாயிரத்தை என் சொந்த சார்பில், நிதியாக அல்ல, காணிக்கையாக வழங்குவதாகக் கூறி அளித்தேன். பின்னர் 1989ஆம் ஆண்டு வேணுகோபால் சர்மா நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று அவருடைய புதல்வர் 24.5.89 அன்று என்னைச் சந்தித்துக் கூறியதும் உடனடியாக பத்தாயிரம் ரூபாய் வழங்கியதுடன், 7.4.1990 அன்று அவருடைய குடும்பத்தாரைத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து அரசின் சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதியினை வழங்கி மகிழ்ந்தேன்.

இப்போது கூட நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்கு "செம்மொழி''த் தகுதியை வழங்கிடுக எனக் கோரிக்கை வைத்த "பரிதிமாற்கலைஞர்'' என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் வாழ்ந்த வீட்டைப் புதுப்பித்து, வாழும் அவரது வழித் தோன்றல்களின் எதிர்காலத்துக்கான உதவிகளைச் செய்து, அவரது உற்றார், உறவினர், பேரன், பேத்திகள் நிரம்பிய பெருங் குடும்பத்தையும் சிறப்பித்தவன் நான்!

நான் முன்னின்று சிறப்பித்த, அன்பு பொழிந்த குடும்பங்கள்; பார்ப்பனச் சமுதாயக் குடும்பங்கள் மட்டுமல்ல; அரவணைப்பும், ஆதரவும் நல்கிய, பெருஞ்சித்திரனார் குடும்பங்கள் போலப் பலப்பல உண்டு. இளமையிலேயே நட்பினால் பிணைக்கப்பட்டு; நடுவில் அந்த நட்புக்கு இடைவேளை ஏற்பட்டு; கழகத்தின் கலையுலகக் காவலராக இருந்து; பின்னர் பெருந்தலைவர் காமராஜரின் தளபதியாக ஆன பிறகும் "தம்பீ; நீ எங்கிருந்தாலும் வாழ்க!'' என்று அண்ணா அவர்களால் வாழ்த்தப் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி மட்டும்; எங்கிருந்தாலும் எப்போதும் உன் இதயத்தில் இருப்பேன் என்று கூறி இப்போதும் என் இதயத்தில் இருப்போரில் ஒருவர் அல்லவா; அதனால் எங்களைப்பிரித்த கட்சி இடைவெளிகளைக் கடந்து; நிலைத்து விட்ட எங்கள் நட்பின் அடையாளமாகத் தான் இதோ அந்தக்குடும்பம் எனைச் சூழ்ந்து குலவிடும் காட்சியை இந்த நிழற்படம் விளக்குகிறது. மணவிழா அழைப்பு வழங்கிட செல்வன் பிரபுவும், பிரபுவின் பேரக் குழந்தை கணேசும்; குடும்பத்துச் செல்வங்களும் கூடி நிற்கும் இக்காட்சி; நல்ல குடும்பம்; பல்கலைக்கழகம் என்ற பாவேந்தரின் பாட்டுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறதல்லவா!

தமிழகக் கலைக் குடும்பத்தில் எனக்கு எத்தனை எத்தனை நண்பர்கள், எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள், எத்தனை எத்தனை வெற்றிகள், தோல்விகள், நட்பு, பகையெனும் நானாவித நிலைகள், அனைத்தையும் சந்தித்து கலைக் குடும்பம்; ஒன்றையொன்றை வாழ்த்தி மகிழ்கிறதல்லவா?

"மறப்போம், மன்னிப்போம்'' அரசியலில் மட்டுமல்ல; கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போதித்த அண்ணா அவர்கள்; இதனையும் மனித நேயம் வளர்க்கும் இரண்டு மருந்து மாத்திரைகளாக நமக்கு வழங்கியுள்ளார் அல்லவா? அதன் வலிமை தான் இது!

மன்னித்து மறக்க வேண்டியது; "தீது'' எனும் ஒன்றைத் தான் என்பதை நான் தெரிந்து தெளிந்து நடப்பது போல்; உடன்பிறப்பே; நீயும் நடப்பாய் என்று நம்புகிறேன், நடக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கிடையே ஒரே நாளில்; 6.12.2008 சனிக்கிழமை; காலையில்; "தாத்தா எனக்கு பிறந்த நாள் இன்று, வாழ்த்து என்னை''யென்று அண்ணாவின் பேரன் மலர்வண்ணன் வரவே; என் மனத்தில் பன்னீர் தெளித்தது போன்ற உணர்வு, மழலையாக இருந்த போது "மலர், மலர்'' என்று அண்ணா அன்பு பொங்கிட கொஞ்சி மகிழ்வாரே; அந்த மலர்வண்ணன் மனைவியுடன், இந்தத் தாத்தாவிடம் வாழ்த்து பெற வந்த போதும் சிவாஜி குடும்பத்தினர், கொள்ளு பேரன் பேத்தியென மனமகிழ வந்து மணவிழா அழைப்பிதழ் தந்த போதும்;

"நமது'' குடும்பத்தில் உள்ள பேரன் பேத்திகளையும், கொள்ளுப் பேரன் பேத்திகளையும் சிதற விடாமல் குடும்பம் செழிப்புற்று தழைக்குமென்று பெரியோர் சொன்ன சொல் பலித்ததையும் எண்ணி மகிழ்கிறேன்.

இக்கடிதத்தில் முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ள ஆன்றோர், சான்றோர், குடும்பங்களை ஆதரித்துப் போற்றியதன் பயன் இதுவென எண்ணி பெருங்குடும்பமாம் நமது கழகத்தின், உன் போன்ற உடன்பிறப்புகள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

மூலம் - வெப்துனியா

Read more...

பொன்சேகாவின் திமிர்-கலைஞர் கண்டனம்

திங்கள்கிழமை, டிசம்பர் 8, 2008, 16:17

ென்னை: தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பது உண்மையாக இருந்தால் அது கடும் கண்டனத்துக்குரியது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கை ராணுவ தளபதி தமிழக அரசின் தலைவர்களை கோமாளிகள் என்று கூறியிருக்கிறாரே?

கருணாநிதி: அப்படி இலங்கை தளபதி சொல்லி இருப்பது உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது.


இங்குள்ள தமிழக தலைவர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகள் அடிப்படையில் ஒருவரை பற்றி மற்றொருவர் விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் இன்னொரு நாட்டவர் தமிழக தலைவர்களை இவ்வாறு விமர்சிப்பது எந்த காலத்திலும் ஏற்க முடியாது. அப்படி விமர்சித்திருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கேள்வி: இதை நீங்கள் பிரதமர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

கருணாநிதி: இலங்கை ராணுவ தளபதி கூறியது பத்திரிகையில் வந்துள்ளது. ராமதாஸ் கூறிய கருத்தும் இந்நேரம் பிரதமருக்குத் தெரிந்திருக்கும்.

கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த பிரணாப் முகர்ஜி எப்போது செல்கிறார்?

கருணாநிதி: இன்னும் தேதி குறிப்பிடவில்லை.

கேள்வி: போர் நிறுத்தம் செய்ய இந்தியா வற்புறுத்தாது என இலங்கை அமைச்சர் கூறியிருக்கிறாரே?

கருணாநிதி: சர்வ கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இலங்கைக்கு சென்று நமது கோரிக்கை வலியுறுத்தவும், போர் நிறுத்தம் பற்றிய கோரிக்கையை வலியுறுத்தவும் இந்த அடிப்படையில் அவர்களை நடந்து கொள்ள செய்யவும் இலங்கைக்கு செல்ல வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கேட்டுக் கொண்டோம். அதை பிரதமரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

கேள்வி: கடந்த முறை வெள்ள நிவாரணத்துக்கு நாம் கேட்ட தொகையில் 10ல் ஒரு பங்குகூட மத்திய அரசு ஒதுக்கவில்லையே?

கருணாநிதி: சென்ற முறை வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்டதை மத்திய அரசு வழங்கவில்லை. இந்தமுறை அவ்வாறு இல்லாமல் நாங்கள் கேட்கும் நிதியை வழங்க வேண்டும் என பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் கூறியிருக்கிறோம். அதனால் நாங்கள் கோரிய அளவு நிதி வழங்கு வார்கள் என நம்புகிறேன்.

கேள்வி: மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்கும்போது தமிழ்நாட்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

கருணாநிதி: அதுபற்றி எனக்கு தெரியாது. வாய்ப்பு இருந்தால் மகிழ்ச்சி தான்.

கேள்வி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போதாது என்று கூறுகிறார்களே?

கருணாநிதி: எனக்குப் போதும்.

கேள்வி: அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு என்ன ஆகும்?

கருணாநிதி:- அது விரைவில் சட்டமாகும். அருந்ததியர் இட ஒதுக்கீடு குறித்து இன்னொரு துணை கமிட்டி அமைத்து இருந்தோம். அந்த கமிட்டி கூடி இன்று அறிக்கை கொடுத்துள்ளது. எனவே மிக விரைவில் அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் கொண்டு வரப்படும்.

கேள்வி: தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை இருக்கிறதே?

கருணாநிதி: இப்போது இல்லை.

கேள்வி: மத்திய அரசிடம் இருந்து ஒதுக்கப்படும் மின்சாரம் கிடைக்கவில்லையே?

கருணாநிதி:- 2000 மெகாவாட் மின்சாரம் வரவேண்டும். அது வரவில்லை. அதுபற்றி அமைச்சரிடம் பேசப்பட்டுள்ளது. டிசம்பரில் 1000 மெகாவாட் மின்சாரமும், ஜனவரி மாதம் 1000 மெகாவாட்டும் தருவதாக கூறி இருக்கிறார்கள் என்றார்.

நன்றீ - தட்ஸ்தமிழ்

Read more...

எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம்! கருணா‌நி‌தி ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்து

எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம்! கருணா‌நி‌தி ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்து






எங்கும் மனிதநேயம் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம். எல்லோரிடமும் இன்முகம் காட்டி, இன்சொல் கூறி இதயங்கள் இணைந்து இன்புற ஏற்ற வழி அமைப்போம் என இத்திருநாளில் அனைவரும் உறுதி ஏற்போமாக! எ‌ன்றமுதலமைச்சர் கருணாநிதி ப‌க்‌‌ரீ‌த் வா‌ழ்‌த்து‌ செ‌ய்‌தி‌ கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று விடுத்துள்ள பக்ரீத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில், தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பெரு நாள் இஸ்லாமிய மக்களால் இன்று (9.12.2008) எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்நாளைக் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் நலமும் வளமும் பெருகிட எனது இதயம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியவர் இடர்தீர வழங்கி மகிழ்வதை "ஈத்துவக்கும் இன்பம்'' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இஸ்லாமியப் பெருமக்களுக்கு வழி காட்டுவது இந்த பக்ரீத் பெருநாள்.

நபிகள் நாயகத்திடம் ஒரு மனிதர், "இஸ்லாமில் சிறந்தது எது?'' என்று கேட்க, அதற்கு அவர்கள், "ஏழைகளுக்கு உணவளித்தல், நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் கூறுதல்'' என்றார்கள். ஏழைகளுக்கு உணவளித்தல் மூலம் இரக்க உணர்வும், எளியோரை அர வணைக்கும் பெருந்தன்மையும் வளரும், சலாம் கூறுவதன் மூலம் இதயங்கள் இணையும், மனித மனங்களில் நேச ஊற்றுகள் பொங்கிப் பெருகும். அது தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் மனத்தூய்மையையும், நெருக்கத்தையும், சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்கிறது இஸ்லாம் நெறி.

இந்த நெறி தழைக்க, எங்கும் மனிதநேயம் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம். எல்லோரிடமும் இன்முகம் காட்டி, இன் சொல் கூறி இதயங்கள் இணைந்து இன்புற ஏற்ற வழி அமைப்போம் என இத்திருநாளில் அனைவரும் உறுதி ஏற்போமாக! எ‌ன்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

மூலம் - வெப்துனியா

Read more...

Sunday, December 7, 2008

தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: பொன்சேகா திமிர் பேட்டி

திங்கள்கிழமை, டிசம்பர் 8, 2008, 9:37

கொழும்பு: தமிழகத்தில் உள்ள அரசியல் கோமாளிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா திமிராக பேட்டி அளித்துள்ளார்.

தமிழக அரசியல் தலைவர்கள் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கும் போக்கை தடுத்து நிறுத்துமாறு கோரி வருவதை அவமதிக்கும் வகையில் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரை நிறுத்துமாறு ஒருபோதும் இந்தியா கூறாது என நம்புகிறேன். விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கும் ஆபத்து உள்ளது.


இதை உணர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கோமாளிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு, இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன். விடுதலைப்புலிகளை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்தி வருபவர்கள். இவர்களின் பேச்சை இந்திய அரசு மதிக்காது என நம்புகிறேன்.

விடுதலைப் புலிகள் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரதமர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ளும்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவில் பிரச்சினைகளைக் கொடுத்தவர்கள். எனவே இவர்களால் இந்தியாவுக்கு எந்த வகையிலும் லாபம் இருக்க முடியாது. மாறாக ஆபத்துதான் அதிகம்.

ராணுவ நடவடிக்கையின்போது உயிரிழப்பு நேரிடாமல் ராணுவம் கவனத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள், இலங்கை பாதுகாப்புப் படையினர் குறித்து அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டால், நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைக்கும் வருமானம் நின்று போய் விடும் என்ற அச்சம்.

இந்த நேரத்திலாவது அவர்கள் உண்மையை உணர வேண்டும். விடுதலைப் புலிகளை காப்பாற்ற முயல்வது வீண் என்பதை அவர்கள் உணர வேண்டும். விடுதலைப் புலிகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இன்னும் முக்கியமாக, விடுதலைப் புலிகள் பிரச்சினை இலங்கையின் உள் விவகாரம், அதில் தலையிடுவது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்பதையும் அவர்கள் உணர் வேண்டும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.

தட்ஸ்தமிழ்.காம் , 08 டிசம்பர் 2008

Read more...

Saturday, December 6, 2008

கேஸ் விலையைக் குறைக்க கலைஞர் கடிதம்

சென்னை:

பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது போல சமையல் எரிவாயு விலையையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவுக்கும் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார். (C)

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்புக்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படுமா என்று நாட்டு மக்கள் எதிர் பார்த்து காத்திருந்த வேளையில் அவற்றின் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

இந்த விலை குறைப்பால் பெரும்பாலான மக்கள் பயன் அடைவார்கள். இந்த அறிவிப்பை வெளி யிட்டதற்கு நான் நன்றி தெரி வித்துக்கொள்கிறேன்.தி.மு.க.அரசு 2006-07ம் ஆண்டில் சமையல் வாயு இணைப்புடன் கியாஸ் அடுப்பு இலவசமாக வழங் கும் திட்டத்தை பெண்கள் பயன் அடையும் வகையில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் 3 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன் பெறும் வகையில் ரூ.60 கோடியில் அமுல்படுத்தப்பட்டது.

2007-08ம் ஆண்டில் கியாஸ் இணைப்புடன் 7.52 லட்சம் கியாஸ் அடுப்புகள் ரூ.160 கோடியில் இலவசமாக வினியோகிக்கப்பட்டது. இதுவரை 10.52லட்சம் ஏழை குடும்பங்கள் இந்த திட்டத்தால் பயன் அடைந்துள்ளன. இந்த திட்டம் 2008-09 ஆண்டிலும் தொடரும் மேலும் 8 லட்சம் ஏழை குடும்பம் பயன்பெறும். இதற்கான பட்ஜெட் ஒதுக் கீடு ரூ.160 கோடி.

சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும் என்று தாய் மார்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். சமை யல் வாயு விலையை உயர்த் துவதற்கு முன்பு இருந்த பழைய விலைக்கே குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனது இந்த கோரிக்கையை நன்கு பரிசீலித்து நல்ல அறிவிப்பை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றிய அறிவிப்புக்கு எனது மன மார்ந்த நன்றி என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இதேபோல முரளி தியோராவுக்கும் கடிதத்தின் நகலை அவர் அனுப்பியுள்ளார்.

Read more...

தமிழக நிவாரணப் பொருட்கள் வன்னியில் விநியோகம்!

தமிழக நிவாரணப் பொருட்கள் வன்னியில் விநியோகம்
[ வெள்ளிக்கிழமை, 05 டிசெம்பர் 2008, 07:44.08 AM GMT +05:30 ]

தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க மேற்பார்வையுடன் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று வழங்கப்பட்டன.

கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் இப்பொருட்கள் நேற்றும், இன்றும் (வியாழன், வெள்ளி) மக்களுக்கு வழங்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிவாரணப் பொதிகளில் உடுபுடைவைகள் அடங்கிய பொதிகள் இன்னமும் வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைக் குழு - இலங்கை அரசு முரண்பாடு நீங்கி சுமுகநிலை ஏற்பட்டுவிட்டது என சர்வதேச செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.

Read more...

Tuesday, November 25, 2008

டாக்டர் கலைஞர்

சோழநாட்டு சூரியன் வாழ்க! வாழ்கவே!
அது 60 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நீதிக்கட்சி திராவிட கழகமாய் பெயர் மாற்றம் பெற்று இன இழிவு ஒழிப்பு, சுயமரியாதை, சமூக சீர்த்திருத்தத்தை தன் களமாய் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருந்த காலம்.

திராவிடர் கழகத்துக்கென தனி கொடியில்லை. கழக முன்னணியினர் கழகத்துக்கு என ஒரு கொடி வேண்டும் என முடிவு செய்து கொடியினை வடிவமைக்க கூடியிருக்கிறார்கள். தேசத்தின் இழிவை குறிக்கும் வகையில் கருப்பு நிறமும், அந்த இழிவினை ஒழிக்கும் புரட்சி நிறமாக சிகப்பினையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒரு வெள்ளைத்தாளிலே கழகத்துக்கான கொடி வரையப்படுகிறது. கருப்பு நிற மையினால் தாள் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்படுகிறது. நடுவிலே சிகப்பு வட்டம் வரவேண்டும். யாரிடமாவது சிகப்பு நிற பேனா இருக்கிறதா என்று பெரியார் கேட்கிறார். யாரிடமும் இல்லை.

"சிகப்புநிற மை எதற்கு? என் குருதி இருக்கிறதே" என்று கூறியபடி வந்த இருபது வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தன் விரலை குண்டூசியால் துளைத்து வந்த குருதியை கொண்டு சிகப்பு வட்டத்தை பூர்த்தி செய்கிறார். கழகக் கொடி கம்பீரமாக தொண்டனின் குருதியால் உருவாகிறது. அந்த இளைஞர் 84 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ மண்ணில் அஞ்சுகத்தம்மாளின் திருவயிற்றிலே உதித்த உதயசூரியனாம் டாக்டர் கலைஞர்.

கல்லூரியையும், கல்யாண மண்டபத்தையும் காக்க தனி கட்சி தொடங்கிய குடிகாரனெல்லாம் இன்று கலைஞரை பார்த்து எப்போது குடிவந்தாய் கழகத்துக்கு? என்று கேட்கிறான். இந்த இனமான வரலாறு எல்லாம் அந்த குடிகாரனுக்கு தெரியுமா?

இன்று திராவிடக் கட்சிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் கட்சி கொடிகளில் எல்லாம் இருக்கும் சிகப்பு எங்கள் தலைவரின் ரத்தம்!

மானங்கெட்டவர்களே! மதியிழந்தவர்களே! உங்களுக்கெல்லாம் சூடு, சொரணை சிறிதேனும் இருந்தால் தலைவர் கலைஞரின் குருதியில் விளைந்த சிகப்பு நிறத்தை உங்கள் கட்சிக் கொடிகளில் இருந்து நீக்கிவிட்டு அரசியல் நடத்துங்கள். இல்லையேல் பார் போற்ற 84வது பிறந்தநாளை காணும் எங்கள் தங்கத் தலைவன், சோழ நாட்டு சூரியன் டாக்டர் கலைஞரின் பாதம் தொட்டு வணங்கி பிழைத்துப் போங்கள். அரசியல் தலைவர்களிலேயே அரசியல் வாழ்விலும் சரி, சொந்த வாழ்விலும் சரி முழுத்திருப்தியும், எவரெஸ்ட் உயரத்தையும் அடைந்த பரிபூரணத் தலைவர் ஒருவர் உண்டென்றால் உலக வரலாற்றிலேயே அது தலைவர் கலைஞர் மட்டும் தான்.

நடிகர் திலகம் ஒருமுறை சொன்னபடி நமது வாழ்நாளிலே சிலவற்றை யாருக்காவது தரமுடியுமேயானால் உடன்பிறப்புகள் அனைவரும் எங்கள் வாழ்நாளில் பாதியை தலைவர் கலைஞருக்கு தந்து... இன இழிவு நீங்க, தமிழனின் புகழ் தரணியெங்கும் பரவ அந்த தங்கத் தலைவனை பல நூற்றாண்டுகளுக்கு வாழவைப்போம்.

வாழும் தமிழே வாழி! நீ வாழ்ந்தால் தமிழ் வாழும், தமிழனின் புகழ் உயரும் என கூறி வாழும் வள்ளுவன் தலைவர் கலைஞரை வாழ்த்த வயதில்லாமல் உடன்பிறப்புகள் வணங்குகின்றோம்.

வாழ்க தமிழ்!!! வெல்க தமிழர் தலைவனின் நெஞ்சுரம்!!! தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதிய மாபெரும் தலைவர்..... தமிழனுக்கு தன்மான உணர்வை உணரவைத்த நம் தலைவர்...

அண்ணாவின் தாராக மந்திரம்.....
கடமை... கண்ணியம்.... கட்டுப்பாடு..

"கடமையை மட்டுமே கண்ணாகக் கொண்டு வாழ்ந்து, தமிழகத்து இருளை அகற்றிய உதயச்சூரியன்..."

"தனக்கென்று எதையும் தேடிக்கொள்ளா தன்னலம் மற்றத் தலைவர்...."
"அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது வாழ் நாள் முழுவதும் தியாகம் செய்த தாணைத்தலைவர்.."

நன்றி - திராவிடன் "நவீன்"

Read more...

திராவிட முன்னேற்றக் கழகம்

இது அதிகாரப்பூர்வ இணையமல்ல…ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியும் , திமுகவின் அடிப்படைப் பண்புகளான கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு இவைகளை உயிர் மூச்செனப் பின் தொடரும் உடன் பிறப்புகளின் தளம்..!

திராவிட முன்னேற்றக் கழகம் ( தி. மு. க., Dravida Munnetra Kazhagam ) தமிழ்நாட்டின் ஒப்பில்லா அரசியல் கட்சியாகும்.தந்தை பெரியார் என தனது தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடக்கழகத்திலிருந்து சி. என். அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1949 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார்கள்.

அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அறிஞர் அண்ணா (சி.என். அண்ணாதுரை) தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி.மு.க.வின் கொடியாக தேர்வு செய்யப்பட்டது.

1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியாரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது.

1953 ஜூலை 14, 15-ல் அந்நாளைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. 1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2-வது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது.

1958 மார்ச் 2-ல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு “உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. 1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது. 19.4.1961-ல் அக்ககட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி ‘தமிழ்த் தேசியக் கட்சி’-யை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961-ல் திமுக பேரணி நடத்தியது.

1962-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திரா கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச் செயலர் அண்ணா, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார். 1963-ல் “பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 1963 ஜூன் 8, 9, 10 தேதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது.

“தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் 17-ல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க. 1967-ல் நடைபெற்ற 3-வது பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது 1967 பிப்ரவரி 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார்.

அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 ஜூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது.

1969-ல் கலைஞர் (மு. கருணாநிதி) தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பின் கலைஞர், தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1971-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. கலைஞர், 2-வது முறையாக முதல்வர் பொறுப்போற்றார்.

1972 அக்டோ¡ர் 14-ல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது. 1974 ஏப்ரல் 20-ல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.

1975 ஜுன் 25-ல் இந்திய அரசு அவசரநிலை அறிவிக்கப்பட்டதை யடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 முதல் 1976 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வின் செயல்பாடுகளில் அனைத்து சாதியினர் அர்ச்சகராதல் சட்டம் (1971 சனவரி 12), அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் (1970) ஆகியவற்றை முக்கியமானவையாக குறிப்பிடலாம். 1977 ஜூலை 4-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது. 1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது தி.மு.க. இருப்பினும் 1980-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது. 1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. அளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது.

1983 ஆகஸ்ட் 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர், பொதுச் செயலர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். 1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9-ல் தி.மு.க. தலைவர் கலைஞர் உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 1987 டிசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 சனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

1989 டிசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டது. 1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 1991 முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் (அக்கட்சியின்) ‘முரசொலி’ ஏடு ஒடுக்குமுறைக்குள்ளானது.

1993 அக்.11-ல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ (வை. கோபால்சாமி) நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் 2-வது பெரிய பிளவு உருவானது. 1995-ல் தமிழீழத் தமிழர்களுக்கான ஆதரவுப் பேரணியை திமுக நடத்தியது. 1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1967-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது.

புதுவை, காரைக்கால், கர்நாடகம், ஆந்திரம், மும்பை, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இக்கட்சிக்கு கிளைகள் உண்டு. திமுக.வின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘முரசொலி’ வெளிவந்து கொண்டிருக்கிறது.

இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான பாரதீய ஜனதாவுடனும் தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய மதிமுகவுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது.

2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, பாரதீய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது.

அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று கழகத் தலைவர் , முத்தமிழ் அறிஞ்ர் மு.கருணாநிதி அவர்கள் ஐந்தாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்று நல்லாட்சி நடத்தி வருகிறார்…..

Read more...

மாறன் சகோதரர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும்

கலைஞர் தன்னுடைய மனசாட்சியாகக் கருதிய முரசொலி மாறனின் பிள்ளைகள் என்ற ஒரே காரணத்திற்காக மாறன் சகோதரர்களுக்கு செய்தஉதவிகள் ஏராளம்.

கலைஞர் மாறன் சகோதரர்களின் அளவில்லாத நம்பிக்கை துரோகங்களையும், திமுகவுக்கும், தனக்கும், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எதிராக அவர்கள் திட்டமிட்டு செய்து வந்த சதிச் செயல்களையும் பெருந்தன்மையோடும் சில சமயம் வேதனையோடும் சகித்து வந்தார்.

1993 இல் முரசொலியின் பழைய கட்டிடத்தை வங்கி அடமானம் வைத்து சுமார் மூன்று கோடி கொடுத்து சன் குழுமத்திற்கு வித்திட்டவர் கலைஞர்.

திமுகவில் கலைஞரின் மகனான மு.க.ஸ்டாலினுக்கே தரப்படாத மரியாதையாக அரசியலில் அடி எடுத்து வைத்தவுடனேயே தயாநிதிமாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

முப்பது வருடங்களாக அரசியலில் மும்முரமாக பணியாற்றி, பட்டிதொட்டி எங்கும் பம்பரமாகப் பயணப்பட்டு கட்சிப் பணியாற்றி,
இந்திராகாந்தி அம்மையாரின் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்று `மிசா' கொடுமைகளையெல்லாம் அனுபவித்து மீண்ட தனது மகன் மு.க.ஸ்டாலினுக்கு முன்னரே தயாநிதியை அமைச்சராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.

முதன்முதலாக பாராளுமன்றத்தில் கால் பதிக்கும்போதே மத்திய அமைச்சர் என்ற பெரும் பதவி தயாநிதி மாறனுக்கு வழங்கி மகிழ்ந்தார் கலைஞர்.

தயாநிதி இவ்வாறாக கலைஞரின் பெருந்தன்மையை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி அரசியலில் வெகு திறமையாக காய் நகர்த்தி முன்னேறி வந்தது போலவே கலாநிதி தனது தொழிலில் வெற்றிக் கொடி நாட்டினார்.

திமுகவின் நிழலில் கலைஞரின் அரவணைப்பில் சன் குழுமம் மிகப் பலமாக வேரூன்றி வளந்தது, கலாநிதியின் தந்திரங்கள் மறைமுக திட்டங்கள் பலவற்றில் சில கலைஞரின் பார்வைக்கு வந்த போதும் முரசொலி மாறனை எண்ணி அவர் பொறுமை காத்தார்.

இந்தக் காலகட்டத்த்தில் சன் குழுமம் 14 தொலைக்காட்சி அலைவரிசைகள் , 2 பிரபல நாளிதழ்கள், 3 பருவ இதழ்கள், 4 பண்பலை வானொலி நிலையங்கள் என தான் கால் பதித்த எல்லாத் துறைகளிலும் அசுரத் தனமாக வளர்ந்தது.

சன் தொலைக்காட்சி பப்ளிக் லிமிட்டெட் கம்பனியாக 2005 முதல் அறிவித்துக் கொண்டு களத்திற்கு வந்து விட்டதால் இன்று அதன் மொத்த பங்குகள், அவற்றின் மதிப்பு போன்ற வற்றை கணக்கிட்டு இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக கலாநிதிமாறன் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

அதன்படி சன் தொலைக் காட்சியில் கலாநிதிமாறனின் 90 சதவீத பங்குகளின் மதிப்பு அப்போதைய பங்குச் சந்தை நிலைவரப்படி, கலாநிதியின் சொத்து மதிப்பு சுமார் 9,765 கோடி...!

அதாவது இது அதிகாரபூர்வமான சட்டப்படியான சன் தொலைக்காட்சியில் உள்ள கலாநிதி மாறனின் பங்கு மூலமான சொத்து மதிப்பு மட்டும் தான்.

இதை கணக்கிட்டுத்தான் இந்தியாவில் இருபதாவது பணக்காரராக கலாநிதி மாறன் அறிவிக் கப்பட்டார். ஆனால், சன் குழுமம் தவிர்ந்த 25 நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார்.

தினகரன் குழுமம், குங்குமம் உள்ளிட்ட பருவ இதழ்கள், எஸ்.சி.வி, 45 பண்பலை வானொலி நிலையங்கள், கோல் கேபிள்ஸ், கோல் கம்யுனிகேஸன்ஸ், டி.எம்.எஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட், டி.கே. எண்டர்பிரைசஸ் போன்ற 25 நிறுவனங்களிலும் அவர் தான் மிகப் பிரதான பங்குதாரர்களாகவும் மனைவி, அம்மா மல்லிகா, தம்பி தயாநிதி... உள்ளிட்ட குடும்ப உறவுகளை சிறிய பங்குதாரர்களாகவும் கொண்டு நடத்தி வருகிறார்.

இவை அனைத்தையும் கணக்கிலெடுத்தால் கலாநிதிமாறன் குறைந்த பட்சம் 40,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகிறார்.

மாறன் சகோதரர்களின் இக்தகைய எந்த ஒரு நிறுவனத்திலும் கலைஞரின் இரத்த உறவுகள் யாரையும் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ளவில்லை இந்த சதிகார மாறன் சகோதரர்கள்.

மாறன் சகோதரர்கள் தங்கள் சித்தப்பா முரசொலி செல்வத்திற்கும் அவருடைய மனைவியாக வுள்ளதால் கலைஞரின் மகள் செல்விக்கும் ஓரிரு நிறுவனங்களில் மிகச்சில பங்குகளை அனுமதித்துள்ளனர்.

முரசொலி மாறனின் சொந்தத் தம்பியான இந்த முரசொலி செல்வம் தான் தற்போது மாறன் சகோதரர்களைத் தீவிரமாக ஆதரிக்கிறார்.

ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் பிரதான பங்குதாரராக இருந்தார். மற்ற சிலரும் இருந்தனர்.

ஆனால், காலப்போக்கில் இவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக எப்படி கழற்றி விடப்பட்டனர் என்ற சூட்சுமம் தெரியவில்லை.

நவம்பர் 2005 இல் அதிகாரபூர்வமாக தயாளு அம்மாள் தனது 20 சதவீத பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டு விலகினார் என செய்தி வெளியானது.

வேகமாக வெற்றிகரமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்திலிருந்த தனது பங்குகள் முழுவதையும் தயாளு அம்மாள் விருப்பப்பட்டு விலக்கிக் கொண்டாரா? அல்லது வெறுப்புற்று வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டாரா? என்ற தகவல் இதுவரை தெரியவரவில்லை.

ஆனால், சன் குழுமம் ஆலமரமாய் வளர்ந்து கிளை பரப்பிக் கொண்டு போகும் நிலையில் ஆணிவேராய் தங்களுக்கு ஆரம்பத்தில் உதவிய கலைஞரின் குடும்ப உறவுகளுக்கு எந்தப் பலனுமில்லாமல் பார்த்துக் கொண்டனர் மாறன் சகோதரர்கள்.

முரசொலி மாறனை எண்ணி, மாறன் சகோதரர்களால் தனக்கும், திமுகவினருக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகளை எந்த நிலையிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் விவேகமாகவும் பல நேரங்களில் பெருந்தன்மை யாகவுமிருந்தார் கலைஞர்.

தனது கலையுலக அனுபவங்களை தொடராக எழுத விரும்பினார் கலைஞர். அதை கலாநிதி மாறனின் குங்குமம் இதழுக்கு சில ஆரம்ப அத்தியாயங்களை எழுதிக் கொடுத்தார். ஆனால், அதை பல மாதங்களாக பிரசுரிக்காமல் அலட்சியப்படுத்தினார் கலாநிதிமாறன்.

கலாநிதியின் கட்டளையால் தான் தனது கட்டுரைகள் பிரசுரமாகவில்லை என்பதை அறிந்த கருணாநிதி அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க, அது விகடனில் வாராவாரம் வெளியாகி பல்வேறு வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டது.

மாறன் சகோதரர்கள் தன்னையே உதாசினப் படுத்திய போதும் கலைஞர், மாறன் சகோதரர்கள் விசயத்தில் பொறுமை காத்தே வந்தார்.

இவை மட்டும் அல்லாது,

சன் செய்திகளில் பல நேரங்களில் கலைஞரின் முக்கிய அறிக்கைகள் போதுமான முக்கியத் துவமின்றி சுருக்கி சொல்லப்படுவது,

கலைஞர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஒரு சிலவற்றை ஒளிபரப்பாதது,

பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின் போன்றவர்களின் நிகழ்ச்சிகளையும், அறிக்கைகளையும் கூடுமானவரை ஒளிபரப்பாமல் தவிர்த்தது,

கனிமொழி `கருத்து' என்ற அமைப்பை தோற்றுவித்த போதும், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தியபோதும் இருட்டடிப்பு செய்தது,

கலைஞருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டதால் மாலன் அவமானப் படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது,

கலைஞர் சிபாரிசு செய்யும் யாரையும் சன் செய்திப் பிரிவிலோ அல்லது வேறு பிரிவிலோ சேர்ப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே கலாநிதி மாறன் கடைப்பிடித்து வந்தது,

இப்படி எல்லாம் செய்து மாறன் சகோதர்கள் திமுகவினரையும், கலைஞரின் குடும்பத்தினரையும், கடைசியில் கலைஞரையுமே மதிக்காமல் நடக்க ஆரம்பித்தது எதனால் என்று பார்த்தால் சன்டிவி தொடங்கிய பிறகு திமுகவிற்கு கிடைத்த வெற்றிகள் அனைத்தும் தங்களாலேயே கிடைத்தது என்று அவர்கள் தப்புக் கணக்குப் போட்டதுதான்.

1996 தொடங்கி ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் தி.மு.க. வின் வெற்றிக்கு சன் தொலைக் காட்சியின் பலம் தான் காரணம் என்று கருதினர் மாறன் சகோதரர்கள்.

பெருவாரியான பார்வையாளர்களை தன்வசம் வென்றெடுத்திருந்த சன் குழுமத்தின் செய்திகள், கருத்துக் கணிப்புகள், விவாதங்கள் போன்றவை தி.மு.க. வின் வெற்றிக்கு கணிசமான பங்காற்றியது உண்மையே, ஆனால் அந்த வெற்றிக்கு முழுக் காரணமும் தாங்கள்தான் என்று கருதினர் மாறன் சகோதரர்கள். .

கலைஞர் 100 கூட்டங்களில் பேசினாலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை சன் தொலைக்காட்சியின் பத்து நிமிட ஒளிபரப்பு ஏற்படுத்துகிறது என்றும் கருதினர் மாறன் சகோதரர்கள்.

கலைஞரின் காலடி தடம் பட முடியாத குக்கிராமங்களுக்கெல்லாம் தங்கள் சன் டிவி தான் அவரது கருத்துகளை கொண்டு சேர்க்கிறது என்றும்,

சன் குழுமத்தின் பிரசார பலமில்லாமல் தி.மு.க.வால் தேர்தலை எதிர்கொள்வது இயலாதென்றும்

மாறன் சகோதரர்கள் மனக்கணக்குப் போட்டனர். ஆக, எப்படியாயினும் தங்களை அனுசரித்துப் போவதைத் தவிர கலைஞருக்கு வேறுவழியில்லை என்ற முடிவுக்கு வந்தனர். அதனாலேயே அவர்கள் தலை கால் புரியாமல் ஆட ஆரம்பித்தனர்.

சன் குழுமத்தின் ஆரம்பம் தொடங்கி அதன் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் கலைஞரின் பங்கிருந்தது.

கலைஞரின் அரவணைப்பு, பண உதவி, அரசியல் பலம் போன்றவை மாறன் சகோதரர்களின் விஸ்வரூப வளர்ச்சிக்கு விதையாய், நீராய் உதவியது என்பதை அவர்கள் பெற்ற அளப்பரிய செல்வாதாரமும், சிரமமில்லாமல் கிடைத்த அதிகார பலத்தால் பெற்ற ஆணவமும் சேர்ந்து மாறன் சகோதரர்களை மறந்துவிடச் செய்து விட்டன.

இந்தியப் பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் மாநில முதல்வர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், உலகப் பெரும் பணக்காரர்கள் இவர்களோடு தயாநிதிமாறனுக்கு பழகக் கிடைத்த வாய்ப்புகள் அவரை தலை, கால் தெரியாமல் புரட்டிப்போட்டது.

மாறன் சகோதரர்களின் கால்கள் யதார்த்தம் என்ற தரையைத் தொட மறுத்தது.
மரம் வேரை மறந்தது.

அளப்பரிய செல்வமும் அதிர்ஷ்டமுமாய் வந்த அதிகார பலமும் மாறன் சகோதரர்களுக்கு மனநிறைவைத் தரவில்லை,

கலைஞரின் அடுத்த தகுதியான வாரிசாக தயாநிதி மாறன் இருக்க, அதற்குத் தடைக்கற்களாக மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும், கனிமொழியும் இருப்பது தங்கள் இலட்சியத்திற்கு இடையூறாக கருதினார்கள்.

ஓரணியில் ஒன்றாக இருக்கும் மு.க.ஸ்டாலினையும், மு.க.அழகிரியையும் பிரிப்பது,

இருவரையும் ஒருவருக்கொருவர் எதிராய் மாற்றுவது,

தினகரனில் கலைஞரின் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பை கலைஞரின் எச்சரிக்கையையும் மீறி வெளியிடுவது,

அந்தக் கருத்துக் கணிப்பின் விளைவாய் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்த்து, அப்படி அவர்கள் செய்யும் வன்முறைகளை அடிப் படையாக வைத்து அவரது அரசியல் செல்வாக்கை அழிப்பது,
போன்றவையே மாறன் சகோதரர்களின் திட்டம்.

மதுரை மாவட்டத்தில் எஸ்.சி.வி. யின் ஏகபோகத்தை தடுத்து சிறு கேபிள் ஆப்பரேட்டர்களின் தொழிலுக்கு அரணாக மு.க.அழகிரி செயற்படுவதும் மாறன் சகோதரர்களின் கட்டற்ற கோபத்திற்கு மற்றொரு காரணமாயிருந்தது.

மதுரை தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் உயிர் பலியான பிறகு மு.க.அழகிரியை சட்டத்திற்கு மீறிய அதிகாரமையமாய் செயற்படுகிறார் என்று மீண்டும் மீண்டும் ஓலமிட்டன சன் தொலைக்காட்சியும், தினகரனும்.

அரசியலில் இலாபமும், நஷ்டமும் சகஜமே. ஆனால், கலைஞரின் தயவால் இலாபத்தை மட்டுமே அனுபவித்து வந்த மாறன் சகோதரர்கள், முதன்முறையாக நஷ்டத்தை கண்டு கதி கலங்கி குமுறி தீர்த்தனர்.

அழகிரியை சிறைக்குள் தள்ளாமல் நாங்கள் ஓயப்போவதில்லை....' என மார்தட்டினார்கள்.

அழகிரி ஆதரவாளர்கள் செய்தது அக்கிரமமாக இருக்கலாம். ஆனால் அதை தூண்டி விட்டது யார்?

தனது தலைவன் அவமானப் படுத்தப் படுவதை எதிர்த்து அமைதியாக அறவழியில் மட்டுமே போராட வேண்டும் என்பதை எல்லாத் தொண்டர்களிடமும் எதிர்பார்க்க முடியாது அல்லவா?

தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டால் பிரச்சினை வெடிக்கும் எப்று கலைஞர் எச்சரித்த பின்னும் அந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்ட மாறன் சகோதரர்களின் நோக்கம் என்ன?

மு.க.அழகிரியை எதிர்த்து நல்லவர்கள் என்று வேடம் போட்டுக் கொள்வதற்கு மாறன் சகோதரர்களுக்கு தார்மீக தகுதி என்ன இருக்கிறது.

கலைஞர் தன்னால் உருவாக்கப்பட்டவர்கள் தன்னைக் கடந்து சென்று தன் மகன் மு.க.அழகிரியை அழித்தொழிக்க நினைப்பதை தனது அறிவுக்கும் அனுபத்திற்கும் விடப்பட்ட அறைகூவலாகத் தான் எதிர்கொண்டார்.

தன்னைத் தவிர தாங்கிப் பிடிக்க ஆளில்லாத தயாநிதிமாறனை அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற அவருக்கு சிறிதளவும் சிரமம் ஏற்படவில்லை.

கட்சியின் அனைத்து மட்டத்தினரிடையேயும் மாறன் சகோதரர்கள் குறித்த மனக்கசப்பு மண்டிக் கிடந்தது. அது அவர்களை கலைஞர் கைவிட்ட பின்பு நிர்வாகக் குழுவில் பொங்கி பிரவகித்தது.

மாறன் சகோதரர்களின் வளர்ச்சி கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என தி.மு.க. திட்டவட்டமாக தீர்மானித்தது. மாறன் சகோதரர்களின் பேராசை பெரு நஷ்டத்தில் முடிந்தது.

நன்றி - அற்விழி வலைப்பூ

Read more...

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP