Saturday, December 6, 2008

தமிழக நிவாரணப் பொருட்கள் வன்னியில் விநியோகம்!

தமிழக நிவாரணப் பொருட்கள் வன்னியில் விநியோகம்
[ வெள்ளிக்கிழமை, 05 டிசெம்பர் 2008, 07:44.08 AM GMT +05:30 ]

தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க மேற்பார்வையுடன் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று வழங்கப்பட்டன.

கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் இப்பொருட்கள் நேற்றும், இன்றும் (வியாழன், வெள்ளி) மக்களுக்கு வழங்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிவாரணப் பொதிகளில் உடுபுடைவைகள் அடங்கிய பொதிகள் இன்னமும் வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைக் குழு - இலங்கை அரசு முரண்பாடு நீங்கி சுமுகநிலை ஏற்பட்டுவிட்டது என சர்வதேச செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.

3 பின்னூட்டங்கள்:

Anonymous,  December 6, 2008 at 8:28 AM  

தழிழகத்தின் உதவி தமிழர் கைகளில் கிடைத்தது மிக மகிழ்ச்சி. புலிகளின் கைகளில் இந்த நிதி போய் இருந்தால் அது ஆயுதமாக மாறியிருக்கும்.

Anonymous,  December 6, 2008 at 8:32 AM  

ஒரு காலத்தில் புலிகளுக்கு ஆயுதமும் கொடுத்தது தமிழகம்தான் என்பதை மறக்க வேண்டாம்.!

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP